Friday, September 20, 2024

ஐ.சி.சி. தொடர்களில் இந்தியா ஏன் கோப்பையை கைப்பற்ற முடியவில்லை..? – பாண்டிங் கருத்து

by rajtamil
0 comment 37 views
A+A-
Reset

ஐ.சி.சி. தொடர்களில் இந்தியா ஏன் கோப்பைகளை வெல்ல முடியவில்லை? என்பது குறித்து ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்திருக்கிறார்.

சிட்னி,

ஐ.சி.சி. தொடர்களில் இந்திய அணி கோப்பையை வென்று 11 ஆண்டுகள் ஆகிவிட்டன. 2013 -ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தோனி தலைமையில் கோப்பையை வென்றதே கடைசி தொடராகும்.

அதன் பிறகு விராட் மற்றும் ரோகித் சர்மா தலைமையில் விளையாடிய இந்திய அணி, 2014 டி20 உலகக்கோப்பை, 2017 சாம்பியன்ஸ் டிராபி, 2023 -ம் ஆண்டு உலகக்கோபை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி (2 முறை) என அனைத்து இறுதிப்போட்டிகளிலும் விளையாடி தோல்வியை தழுவி இருக்கிறது.

இந்த நிலையில் இந்தியா ஏன் உலகக் கோப்பைகளை வெல்ல முடிய வில்லை? என்பது குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து பேசிய அவர், " ஐசிசி தொடர்களில் விளையாடும்போது முதலில் உங்களுடைய மனதை நீங்கள் தெளிவாக வைத்துக்கொள்ள வேண்டும். கையில் என்ன பணி இருக்கிறது என்பதில் மட்டும்தான் கவனம் செலுத்த வேண்டுமே தவிர அதைத் தாண்டி வேறு எதையும் யோசிக்க கூடாது. வெளியிலிருந்து வரும் அழுத்தம் குறித்தும் கவலைப்பட கூடாது. இந்திய அணியில் உள்ள திறமைகள் குறித்து கொஞ்சம் கூட சந்தேகப்படத் தேவையில்லை. ஆனால் அவர்களால் உலகக்கோப்பையை வெல்ல முடியவில்லை. அது எளிமையான பணியும் கிடையாது. எனவே இந்திய அணி தங்களுடைய மனதில் உள்ள விஷயம் குறித்துதான் யோசிக்க வேண்டும்.நெருக்கடிகளை எப்படி கையாள்வது என்பது குறித்து கற்றுக்கொள்ள வேண்டும்" என்று கூறினார்.

You may also like

© RajTamil Network – 2024