Saturday, September 21, 2024

ஒடிசா சட்டசபைக்கு தேர்வான புதிய எம்.எல்.ஏ.க்களில் 73 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள்

by rajtamil
0 comment 36 views
A+A-
Reset

புவனேஸ்வரம்,

ஒடிசா மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன், சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 147 தொகுதிகளில் பா.ஜனதா 78 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.தொடர்ந்து 24 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பிஜூ ஜனதா தளம் 51 இடங்களை மட்டும் பிடித்து, ஆட்சியையும் பறிகொடுத்தது. இது தவிர காங்கிரஸ் கூட்டணி 14 இடங்களிலும், சுயேச்சைகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

தற்போதைய சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற எம்.எல்.ஏ.க்களில் 107 பேர் (73 சதவீதம்) கோடீஸ்வரர்கள். அதிலும் பிஜூ ஜனதா தளம் கட்சியை சேர்ந்த சனாதன் மகாகுட் ரூ.227.67 கோடிக்கு சொத்துக்களை கொண்டவர். இந்த 107 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்களில் பா.ஜனதாவினர் 52 பேர், பிஜூ ஜனதா தளத்தை சேர்ந்தவர்கள் 43 பேர், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் 9 பேர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர் ஒருவர் மற்றும் 2 பேர் சுயேச்சைகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வெற்றி பெற்ற 147 பேரில் 85 பேர் மீது குற்றவழக்குகள் உள்ளன. இதில் 67 பேர் கடுமையான குற்ற வழக்குகளை எதிர்கொண்டுள்ளனர். குற்ற வழக்குகள் உள்ளவர்களில் பா.ஜனதாவை சேர்ந்தவர்கள் 46 பேரும், பிஜூ ஜனதா தளத்தை சேர்ந்த 12 பேரும், காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற 5 பேரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் 3 சுயேச்சைகளும் உள்ளனர்.

You may also like

© RajTamil Network – 2024