Wednesday, November 6, 2024

ஒடிசா முதலமைச்சர் யார்? – ரேஸில் இருக்கும் 6 பாஜக தலைவர்கள்!

by rajtamil
0 comment 19 views
A+A-
Reset

ஒடிசா முதலமைச்சர் யார்? – ரேஸில் இருக்கும் 6 பாஜக தலைவர்கள்!ஒடிசா முதலமைச்சர் பதவிக்காக கடும் போட்டி

ஒடிசா முதலமைச்சர் பதவிக்காக கடும் போட்டி

ஒடிசா மாநிலத்தில் 24 ஆண்டுகாலம் ஆட்சி செய்து வந்த பிஜு பட்நாயக் படுதோல்வி அடைந்ததை அடுத்து, அங்கு முதன்முறையாக பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது. ஆனால், பாஜகவின் முதலமைச்சர் யார் என்பதில் இன்னும் குழப்பம் நீடிக்கிறது.

நாடு முழுவதும் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலோடு, ஒடிசா, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கும் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி பெரிய அளவில் வெற்றிபெற்றதை அடுத்து, அம்மாநில முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு வரும் 9ஆம் தேதி பதவியேற்க உள்ளார். அதேபோல், ஒடிசா சட்டமன்றத் தேர்தலில் பாஜக அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்றுள்ளது.

விளம்பரம்

அங்குள்ள 147 தொகுத்களில் பாஜக கூட்டணி 78 இடங்களிலும், பிஜு ஜனதா தளம் 51 இடங்களிலும் வெற்றிபெற்றது. அத்துடன் காங்கிரஸ் கட்சி 14 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 1, சுயேச்சைகள் 3 இடங்களிலும் வெற்றிபெற்றனர்.

இதையும் படிக்க:
TDP, JDU மட்டுமல்ல.. அமைச்சர் பதவியை கேட்கும் கூட்டணி கட்சிகள்.. பாஜகவிற்கு தொடரும் நெருக்கடி..

ஒடிசாவில் ஆட்சி அமைக்க 74 இடங்கள் மட்டுமே தேவை என்ற நிலையில், பாஜக வசம் 78 எம்.எல்.ஏ.க்கள் இருக்கின்றனர். எனவே, பாஜக விரைவில் பதவியேற்க உள்ளது. ஆனால், முதலமைச்சருக்கான போட்டி இன்னும் கடுமையாக இருக்கிறது.

விளம்பரம்

அதாவது, ஒடிசா மாநில பாஜகவின் முக்கிய தலைவர்களில் 6 பேர் முதலமைச்சர் போட்டியில் இருக்கின்றனர். இதில், முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜகவின் தற்போதைய எம்.பி.யுமான ஜூவல் ஓரம், பாஜக செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா, பாஜக தேசிய துணைத் தலைவர் பைஜயந்த் பாண்டா, பாஜக தலைவர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் உள்ளனர்.

ஜூவல் ஓரம்: சுந்தர்கர் மக்களவைத் தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இவர், முதலமைச்சர் பதவிக்கான போட்டியில் முன்னிலையில் இருக்கிறார். முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்படவில்லை என்றாலும், அதை கொடுத்தால் பணியாற்றுவேன் என்று ஜூவல் ஓரம் கூறியுள்ளார்.

விளம்பரம்
உங்கள் நுரையீரலை சுத்தம் செய்து நச்சு நீக்க உதவும் 10 உணவுகள்.!
மேலும் செய்திகள்…

பைஜயந்த் பாண்டா: கேந்திரபாரா எம்.பி. தொகுதியில் வெற்றிபெற்ற இவர், நான்கு முறை எம்.பி.யாக இருந்துள்ளார்.

சம்பித் பத்ரா: பூரி மக்களவைத் தொகுதியில் வெற்றிபெற்ற இவர், 2014ஆம் ஆண்டு பாஜக செய்தி தொடர்பாளராக நியமிக்கப்பட்டார். சுற்றுலாத் துறையின் தலைவராகவும் இருந்துள்ள சம்பித் பத்ரா, அண்மையில் புரி ஜெகந்நாதரே பிரதமர் மோடியின் பக்தர்தான் என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

தர்மேந்திர பிரதான்: சம்பல்பூர் எம்.பி. தொகுதியில் வெற்றிபெற்ற தர்மேந்திர பிரதான் பாஜக மூத்த தலைவராகவும், கல்வி மற்றும் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் துறை அமைச்சருமாக இருக்கிறார். பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சராக தர்மேந்திர பிரதான் பல சீர்திருத்தங்களையும், திட்டங்களையும் தொடங்கியவர்.

விளம்பரம்

இவர்கள் 4 பேருமே ஒடிசா மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்கள். இவர்களில் யாராவது ஒருவரை தேர்வு செய்தால், அங்கு ஒரு மக்களவைத் தொகுதிக்கும், ஒரு சட்டமன்றத் தொகுதிக்கும் தேர்தல் நடத்த வேண்டியிருக்கும். எனவே, இவர்கள் நான்கு பேரைத் தவிர எம்.எல்.ஏ. தேர்தலில் வெற்றிபெற்ற ஒருவரை முதலமைச்சர் பதவிக்கு தேர்வு செய்ய வாய்ப்புள்ளது.

இதையும் படிக்க:
புதிய அமைச்சரவையில் எந்தெந்த துறைகள்… சந்திரபாபு நாயுடு கொடுத்த லிஸ்ட் இதுதான்?

மன்மோகன் சமல்: ஒடிசாவில் சண்டபாலி சட்டமன்றத் தொகுதியில் வெற்றிபெற்ற இவர், ஒடிசா மாநில பாஜக தலைவராக இருக்கிறார். ஒடிசா மாநிலத்தில் பாஜகவை வலுப்படுத்துவதற்கு பணியாற்றிய இவர், முதலமைச்சர் பதவிக்கான போட்டியில் இருக்கிறார்.

விளம்பரம்

ஜெயநாராயண மிஸ்ரா: பாஜக தலைவர் ஜெயநாராயண் மிஸ்ரா 2022 முதல் ஒடிசா மாநில சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக உள்ளார். இவர் ஒடிசா சட்டமன்றத் தேர்தலில் சம்பல்பூர் தொகுதியில் வெற்றிபெற்றுள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
BJP
,
Odisha

You may also like

© RajTamil Network – 2024