Saturday, September 21, 2024

ஒடிசா முதல்-மந்திரியாக மோகன் சரண் தேர்வு

by rajtamil
0 comment 21 views
A+A-
Reset

புவனேஷ்வர்,

நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து ஒடிசா சட்டசபை தேர்தலும் நடைபெற்றது. மொத்தமுள்ள 147 தொகுதிகளில் பெருமான்மைக்கு 74 தொகுதிகள் தேவை. தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் பா.ஜ.க. 78 தொகுதிகளை கைப்பற்றி பெரும்பான்மையுடன் அபார வெற்றிபெற்றது. ஒடிசாவின் ஆளும் பிஜு ஜனதா தளம் 51 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி தோல்வியடைந்தது. இதையடுத்து, ஒடிசா முதல்-மந்திரி பதவியை நவீன் பட்நாயக் ராஜினாமா செய்தார்.

மேலும், தேர்தலில் அபார வெற்றிபெற்ற பா.ஜ.க. மாநில முதல்-மந்திரியை தேர்வு செய்யும் பணியை தொடங்கியது. அதன்படி, பா.ஜ.க. எம்.எல்.எ.க்கள் கூட்டம் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் ராஜ்நாத் சிங் மற்றும் பூபேந்தர் யாதவ் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஒடிசா முதல்-மந்திரியாக மோகன் சரண் மாஜி தேர்ந்தெடுக்கபட்டார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பா.ஜ.க. வெளியிட்டுள்ளது. 4 முறை எம்.எல்.ஏ.வான மோகன் சரண் நடந்துமுடிந்த சட்டசபை தேர்தலில் கியோஞ்கர் தொகுதியில் போட்டியிட்டு அபார வெற்றிபெற்றார்.

ஒடிசா முதல்-மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மோகன் சரண் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் அவரது பதவியேற்பு நாளை மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது. மோகன் சரணுக்கு கவர்னர் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி கலந்துகொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

© RajTamil Network – 2024