Sunday, October 27, 2024

ஒடிஸா: டானா புயல் கரையை கடக்க தொடங்கியது!

by rajtamil
0 comment 1 views
A+A-
Reset

ஒடிஸாவில் ‘டானா’ புயல் இன்று(அக். 25) கரையைக் கடக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நள்ளிரவு 12.30 மணி நிலவரப்படி, ஒடிஸாவின் பாரதீப் பகுதிக்கு கிழக்கு-வடகிழக்கே 50 கி.மீ. தொலைவிலும், தாமரா பகுதிக்கு தெற்கு- தென்கிழக்கே 40 கி.மீ. தொலைவிலும், மேற்கு வங்கத்தின் சாகர் தீவுக்கு தென்மேற்கே 160 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ள டானா புயல் நிலப்பரப்பை நோக்கி நகர்ந்து வருகிறது.

இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வடக்கு ஒடிஸா – மேற்கு வங்க கடலோரப் பகுதிகளை ஒட்டி, ஒடிஸாவின் புரி மற்றும் மேற்கு வங்கத்தின் சாகர் தீவுகளுக்கு இடையே பிதர்காணிகா – தாமராவுகு இடைப்பட்ட பகுதியில் இன்று அதிகாலை கரையை கடக்க உள்ளது.

இதன் காரணமாக, அடுத்த 3 – 4 மணி நேரத்துக்கு, மேற்கண்ட பகுதிகளில் அதிவேக சூறாவளிக் காற்று மணிக்கு 100-120 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க:டானா புயல் எதிரொலி: ஒடிஸாவில் 10 லட்சம் மக்கள் வெளியேற்றம்

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024