ஒய்எஸ்ஆர் காங்கிரஸின் தவறுகளால் அப்பாவி மக்கள் பாதிப்பு: சந்திரபாபு நாயுடு

by rajtamil
0 comment 12 views
A+A-
Reset

ஒய்எஸ்ஆர் காங்கிரஸின் தவறுகளால் அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார்.

வெள்ளப் பாதிப்புகள் குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு செய்தியாளர்களுடன் பேசுகையில், “நிவாரப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. சிறிது தாமதம் ஏற்பட்டாலும் உணவு வழங்கும் பணி தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. உணவின் தரம் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. ஐவிஆர்எஸ் அழைப்புகள் மூலம் பொது மக்களின் கருத்துகளை சேகரித்து வருகிறோம்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் தொலைபேசியில் நான் பேசினேன். ஆந்திரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டப் பகுதிகளை நேரில் வந்து பார்வையிடும்படி கேட்டுக் கொண்டேன்.

பாஜகவை சமாஜவாதி கட்சி துடைத்தெறியும்: அகிலேஷ் யாதவ்

5 ஆண்டுகளாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசு என்ன செய்துக் கொண்டிருந்தது? புடமேருவில் உள்ள ஆக்கிரப்புப் பகுதிகளைக் கணக்கெடுக்க உத்தரவிட்டுள்ளோம். போலவரம் வலது முக்கிய கால்வாய் தோண்டப்பட்டுள்ளன. ஒய்எஸ்ஆர் காங்கிரஸின் தவறுகளால் அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கிருஷ்ண நதியில் இருந்து கூடுதலாக 40,0000 கன அடி தண்ணீர் வந்திருந்தால் நிலைமை இன்னும் மோசமானதாக இருந்திருக்கும்.

2019 முதல் புடமேரு அருகில் உள்ள பகுதிகளில் ஆக்கிரப்புகள் அதிகரித்துள்ளது. புடமேரு கால்வாய் பெருமளவில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

பலியானவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 5 லட்சம் வழங்கப்படும். சிரமங்களை எதிர்கொள்ளும் கருவுற்றப் பெண்களை கண்டறியப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்படுவார்கள். நாங்கள் 6 லட்சம் பேருக்கு உணவு வழங்கியுள்ளோம்” என்று அவர் பேசினார்.

You may also like

© RajTamil Network – 2024