ஒரே திட்டத்தை 6-வது முறையாக தொடக்கிவைக்கிறார் பிரதமர்: சுப்ரியா சுலே

by rajtamil
0 comment 7 views
A+A-
Reset

புணே மெட்ரோ ரயில் திட்டத்துக்காக பிரதமர் மோடி ஏற்கெனவே 5 முறை வந்துள்ளதாகவும், பணி அதிகமுள்ள பிரதமர், ஒரே திட்டத்துக்காக 6 முறை வருவது அதிர்ச்சியளிப்பதாக தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே கூறியுள்ளார்.

மகாராஷ்டிரம் மாநிலம் புணேவில் இன்று(வியாழக்கிழமை) மாலை 6 மணியளவில், மாவட்ட நீதிமன்ற மெட்ரோ நிலையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு ரூ.20,900 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கவிருந்தார்.

புணேவில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் இருந்து ஸ்வர்கேட் வரை இயக்கப்படும் மெட்ரோ ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கனமழை எச்சரிக்கை காரணமாக, புணேவுக்கு இன்று வருவதாக திட்டமிடப்பட்டிருந்த பிரதமர் நரேந்திர மோடியின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | சிவசேனை(யுபிடி) எம்.பி. சஞ்சய் ரௌத்துக்கு 15 நாள் சிறை!

பிரதமர் மோடியின் புணே பயணம் ரத்து செய்யப்பட்டது குறித்து, தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே செய்தியாளர்களுடன் பேசுகையில்,

'பிரதமர் மோடி வரவிருந்த, புணே மெட்ரோ ரயில் திட்ட தொடக்க விழா ஏற்கெனவே 5 முறை நடந்துள்ளது. இன்று பிரதமர் மோடி வந்திருந்தால் 6 ஆவது முறையாக புணே மெட்ரோ ரயில் திட்டத்தை தொடக்கி வைத்திருப்பார்.

பணி மிகுதியாக உள்ள பிரதமர் போன்ற நபரிடம், ஒரே திட்டத்துக்காக மகாராஷ்டிர அரசு நேரம் கேட்பது மிகவும் அதிர்ச்சியாக உள்ளது.

இதையும் படிக்க | கனமழை எச்சரிக்கை: பிரதமர் மோடியின் புணே பயணம் ரத்து

எனினும், மழை காரணமாக அவர் புணேவுக்கு வர முடியாமல் போனது வருத்தமளிக்கிறது. விரைவில் அவர் மெட்ரோ ரயில் சேவையை தொடக்கிவைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் மெட்ரோ மூடப்பட்டுவிடக் கூடாது' என்றார்.

முன்னதாக புணே மெட்ரோ ரயில் தொடர்பான திட்டங்களுக்கு பிரதமர் மோடி தொடர்ந்து வருவது குறித்து காங்கிரஸ் கட்சியும் விமரிசித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

You may also like

© RajTamil Network – 2024