Saturday, September 21, 2024

ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற ஆக்கி வீரர் ஸ்ரீஜேசுக்கு ரூ.2 கோடி பரிசு: கேரள அரசு

by rajtamil
0 comment 0 views
A+A-
Reset

பாரீஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்திய ஆக்கி கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ்க்கு 2 கோடி ரூபாய் பரிசுத் தொகையாக கேரள அரசு அறிவித்துள்ளது.

திருவனந்தபுரம்,

நடந்து முடிந்த பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்திய ஆக்கி அணி ஸ்பெயினை வீழ்த்தி வெண்கலப்பதக்கம் வென்றது.இந்தியா வெண்கலப்பதக்கம் வெல்ல இந்திய அணியின் ஆக்கி கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் முக்கிய காரணமாக இருந்தார். பாரிஸ் ஒலிம்பிக் தொடருடன் ஓய்வு பெற உள்ளதாக ஏற்கனவே ஸ்ரீஜேஷ் அறிவித்து இருந்தார். அதன்படி அவர் ஸ்பெயின் அணிக்கு எதிரான போட்டியுடன் ஓய்வு பெற்றார். இதனை தொடர்ந்து இந்திய ஜூனியர் ஆக்கி அணியின் பயிற்சியாளர் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில், பாரீஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்திய ஆக்கி கோல் கீப்பர் ஸ்ரீஜேசுக்கு 2 கோடி ரூபாய் பரிசுத் தொகையாக கேரள அரசு அறிவித்துள்ளது. முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற மந்திரி சபை கூட்டத்தில் ஸ்ரீஜேசுக்கு 2 கோடி ரூபாய் வழங்கும் முடிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக முதல்-மந்திரி அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024