ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு தலைவர்கள் வாழ்த்து

by rajtamil
0 comment 8 views
A+A-
Reset

ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு தலைவர்கள் வாழ்த்து

சென்னை: ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய விளையாட்டு வீரர் நீரஜ் சோப்ராவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: நீரஜ் சோப்ராவுக்கு எனது வாழ்த்துகள். இந்தியாவுக்கு உலக அரங்கில் தொடர்ந்து பெருமை சேர்த்து வரும் நீரஜ்ஜின் மணிமகுடத்தில் இப்பதக்கம் மற்றுமொரு நன்முத்து.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: நீரஜ் சோப்ராவுக்கு எனது வாழ்த்துகள். அசைக்க முடியாத அவரது அர்ப்பணிப்பு தொடர்ந்து இந்தியாவை பெருமைப்படுத்துவதுடன் ஆர்வமுள்ள விளையாட்டு வீரர்களுக்கு உத்வேகத்தையும் அளிக்கிறது.

பாமக நிறுவனர் ராமதாஸ்: நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்று, அடுத்தடுத்த ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற இந்தியாவின் முதல் தடகள வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். ஒலிம்பிக்கில் இந்தியாவின் கொடியை உயர்த்திப் பிடித்த சோப்ராவுக்கு வாழ்த்துகள்.

மநீம தலைவர் கமல்ஹாசன்: நீரஜ் சோப்ராவுக்கு எனது வாழ்த்துகள். திறமை கொண்ட ஒலிம்பிக் சாம்பியனை பெற்றதில் இந்தியா பெருமை கொள்கிறது.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: ஒலிம்பிக்கில் இந்திய விளையாட்டு வீரர்களின் வெற்றி, உலக அளவில் இந்தியாவுக்கு மேலும் புகழ் சேர்க்கும். நீரஜ் மேலும் பல போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கான முதல் வெள்ளிப் பதக்கத்தை வென்று சாதனை படைத்திருக்கும் நீரஜ் சோப்ராவுக்கு மனமார்ந்த பாராட்டுகள். அடுத்தடுத்த உலகளவிலான போட்டிகளிலும் வெற்றி முத்திரையை பதித்து தனித்துவமிக்க வீரராக திகழ வாழ்த்துகிறேன்.

You may also like

© RajTamil Network – 2024