பீகாரில் உள்ள இந்த கிராமம் ஒவ்வொரு வருடமும் இடம் பெயர்கிறது; ஏன் தெரியுமா?
கிராமமக்கள்
மனிதர்களாகிய நாம்தான் வேலை நிமித்தமாகவும், படிப்பிற்காகவும் வெவ்வேறு ஊர்களுக்கு இடம் பெயர்வோம். ஆனால் இங்கோ ஒரு கிராமமே ஒவ்வொரு வருடமும் இடம் பெயரும் அதிசயம் நிகழ்கிறது. பீகாரில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு கிராமம் தன்னுடைய இடத்தை மாற்றிக் கொள்கிறது. உண்மையை சொல்ல வேண்டுமென்றால், இந்த கிராமம் ஒவ்வொரு ஆண்டும் அதன் இடத்தை விட்டு ஒரு புதிய வடிவம் பெறுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் இங்கு புதிய கட்டிடங்கள் கட்டப்படுகின்றன, ஆனால் இந்த வீடுகள் அனைத்தும் ஒரு வருடம் மட்டுமே நீடிக்கும். பீகாரில் உள்ள சஹர்சா மாவட்டத்தின் அதிசயமான ஊரைப் பற்றியே இப்போது நாங்கள் பேசசிக் கொண்டிருக்கிறோம். இங்குள்ள மக்கள் பரிதாபகரமான வாழ்க்கையை வாழ வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதற்கான காரணம் என்ன? வாருங்கள் தெரிந்துகொள்வோம்.
விளம்பரம்
நௌலா பஞ்சாயத்து, தர்ஹர், பகுனியா மற்றும் சஹர்சா மாவட்டத்தின் நோஹ்தா தொகுதியின் ஹட்டி ஆகிய பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் ஒவ்வொரு ஆண்டும் கோசி ஆற்றில் மூழ்கி விடுகிறது. ஒவ்வொரு ஆண்டும் புதிய கிராமங்கள் இங்கு குடியேறி புதிய வீடுகள் கட்டப்படுகின்றன. ஆனால் இந்த வீடுகள் ஒரு வருடம் மட்டுமே இருக்கும். கோசி ஆற்றில் வெள்ளம் வரும் போது இங்கிருந்த அனைத்து சாலைகளும் தெருக்களும் அடித்து செல்லப்படுகின்றன. கோசி ஆறு இந்த கிராமங்கள் அனைத்தையும் மூழ்கடித்துச் செல்கிறது.
விளம்பரம்
இதையும் வாசிக்க : 8 நாட்கள் ஊரடங்கு அறிவிப்பு…எந்த மாவட்டத்தில் தெரியுமா ?
ஒவ்வோர் ஆண்டும் வெள்ளத்தின் போது இப்பகுதி மாற்றம் அடைவதாக இங்குள்ள கிராம மக்கள் கூறுகின்றனர். அதன்பிறகு இவர்கள் அனைவரும் புதிய கிராமத்தில் குடியேறி, புதிய வீடுகள் கட்டிக்கொள்வதாக கூறுகின்றனர். இந்த இடைபட்ட நேரத்தில் அவர்கள் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது. வெள்ளத்தின் போது கோசி ஆற்றின் ஆக்ரோஷத்தில் எந்த வீடு எப்போது மூழ்கும் என்று கணிப்பது கடினம் என்பதால் ஆற்றோரம் உள்ள மக்கள் இரவு பகலாக விழித்திருக்க வேண்டியுள்ளது. இப்படி தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வருவதால் இங்கு அபாயம் என்பது நிரந்தரமாக குடி கொண்டுள்ளது.
விளம்பரம்
ஒவ்வொரு ஆண்டும் கிராமம் இடம் பெயர்கிறது; சாலைகள் துண்டிக்கப்படுகின்றன; போக்குவரத்திலும் பெரும் சிக்கல்கள் நிலவுகின்றன என்று நாவுலா பஞ்சாயத்தின் முக்கிய பிரதிநிதி டாக்டர் புச்சி சா கூறுகிறார். இப்படி தொடர்ச்சியான வெள்ளம் காரணமாக போக்குவரத்து வாகனங்கள் இங்கு வருவதையே நிறுத்திவிட்டன. இதில் வருத்தமான விஷயம் என்னவென்றால், இங்குள்ள நிலைமை குறித்து அரசு போதிய கவனம் செலுத்தாமல் இருப்பதும், அதிகாரிகள் அக்கறை இல்லாமல் இருப்பதும் தான் வேதனையான விஷயம். இயற்கையை நாம் வெல்ல முடியாது. ஆனால் இதில் அல்லல்படும் மக்களுக்கு அரசாங்கம் நினைத்தால் உதவ முடியும்.
விளம்பரம்
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க
- Telegram
- Follow us onFollow us on google news
.Tags:
polluted river
,
village