ஒவ்வொரு போட்டியிலும் இவர்கள் இருவரும் சிறப்பாக செயல்பட முடியாது: ரோஹித் சர்மா

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

ஒவ்வொரு போட்டியிலும் இந்த இரண்டு வீரர்களும் சிறப்பாக செயல்பட வேண்டும் என நினைப்பது நியாயமாகாது என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து வரலாற்று டெஸ்ட் தொடர் வெற்றியைப் பெற்றுள்ளது. இந்திய மண்ணில் நியூசிலாந்து அணி டெஸ்ட் தொடரை வெல்வது இதுவே முதல் முறையாகும்.

இதையும் படிக்க: இங்கிலாந்தின் யுக்தி வேலை செய்யவில்லை; பாகிஸ்தானை பாராட்டிய முன்னாள் இங்கிலாந்து கேப்டன்!

அது நியாயமாக இருக்காது

ஒவ்வொரு போட்டியிலும் சுழற்பந்துவீச்சாளர்களான ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் சிறப்பாக செயல்பட வேண்டும் என நினைப்பது நியாயமாக இருக்காது என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் அதிக விக்கெட்டுகள் எடுக்கத் தவறியது தொடர்பாக பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

ஜடேஜா, அஸ்வின்

இது தொடர்பாக பத்திரிகையாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது: அவர்கள் மீதான எதிர்பார்ப்பு குறித்து அவர்களுக்குத் தெரியும். அவர்கள் இருவர் மீதும் அதிகப்படியான எதிர்பார்ப்பு இருக்கிறது. அவர்கள் விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும் விக்கெட் எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. அவர்கள் இருவரும் ஒவ்வொரு போட்டியையும் வென்று கொடுக்க வேண்டும் என்ற அழுத்தமும் அவர்கள் மீது உள்ளது. இதனை நியாயமான எதிர்பார்ப்பு என நினைக்கவில்லை.

இதையும் படிக்க:யாருடைய திறமை மீதும் சந்தேகம் இல்லை; டெஸ்ட் தொடர் தோல்வி குறித்து ரோஹித் சர்மா!

போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்பது இந்திய வீரர்கள் அனைவருக்குமான பொறுப்பு. இவர்கள் இருவரின் பொறுப்பு மட்டும் கிடையாது. இந்திய அணிக்காக அஸ்வின் மற்றும் ஜடேஜா இருவரும் சிறப்பாக செயல்பட்டு நிறைய பங்களிப்பை வழங்கியுள்ளனர். அதனால், இந்த விஷயத்தில் நான் அதிகம் சிந்திக்கப் போவதில்லை. எல்லா போட்டிகளிலும் அவர்கள் சிறப்பாக செயல்பட்டு விக்கெட்டுகளைக் கைப்பற்ற வேண்டும் என எதிர்பார்ப்பது நியாயமாக இருக்காது என்றார்.

இந்திய அணிக்காக சொந்த மண்ணில் ரவிச்சந்திரன் அஸ்வின் 326 விக்கெட்டுகளும் (55 டெஸ்ட் போட்டிகளில்), ரவீந்திர ஜடேஜா 225 விக்கெட்டுகளும் (47 டெஸ்ட் போட்டிகளில்) எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024