Saturday, September 21, 2024

ஓடிடியில் வெளியாகும் ‘கல்கி 2898 ஏடி’? – வெளியான தகவல்

by rajtamil
0 comment 14 views
A+A-
Reset

'கல்கி 2898 ஏடி' படத்தின் ஓடிடி குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

சென்னை,

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் 'கல்கி 2898 ஏடி'. 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, அன்னா பென் உள்பட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். கமல்ஹாசன் வில்லனாக நடித்துள்ளார்.

இதனிடையே, கல்கி திரைப்படம் உலகம் முழுவதும் கடந்த மாதம் 27-ம் தேதி வெளியானது. தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம் உள்பட பல்வேறு மொழிகளில் இத்திரைப்படம் வெளியானது. இத்திரைப்படம் வெளியாகி 15 நாட்கள் ஆன நிலையில், 1,000 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி, கல்கி 2898 ஏடி படம் அடுத்த மாதம் சுதந்திர தினத்தன்று பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Original Article

You may also like

© RajTamil Network – 2024