Monday, September 23, 2024

ஓடும்போதே இரண்டாக பிரிந்து சென்ற விரைவு ரயில்: பிகாரில் பரபரப்பு

by rajtamil
0 comment 6 views
A+A-
Reset

பிகாரில் விரைவு ரயில் ஓடிக்கொண்டிருக்கும்போதே, அதன் பெட்டிகளின் இணைப்பு உடைந்து இரண்டாக பிரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பிகார் மாநிலம், புது தில்லியிலிருந்து மேற் வங்க மாநிலம், இஸ்லாம்பூருக்கு மகத் எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் ஞாயிற்றுக்கிழமை சென்றுகொண்டிருந்தது. இந்த ரயில் பிகாரின் பக்சர் மாவட்டத்தில் உள்ள ட்வினிகஞ்ச் மற்றும் ரகுநாத்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே காலை 11.08 மணியளவில் வந்தபோது அதன் பெட்டிகளின் இணைப்பு திடீரென உடைந்து இரண்டாக பிரிந்தது.

ஜம்மு – காஷ்மீர் தேர்தல்: பாஜகவின் 6-ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கிழக்கு மத்திய ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ஷர்ஸ்வதி சந்திரா கூறியதாவது, புதுதில்லியில் இருந்து இஸ்லாம்பூருக்குச் சென்ற மகத் எக்ஸ்பிரஸ் (20802) இணைப்பு உடைந்தது. ட்வினிகஞ்ச் மற்றும் ரகுநாத்பூர் இடையே கடந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

ரயில் எஞ்சினிலிருந்து 13வது பெட்டி எண் S-7 மற்றும் என்ஜினில் இருந்து 14வது பெட்டி எண் S-6 ஆகியவற்றுக்கு இடையேயான இணைப்பு உடைந்து பிரிந்தது. மீட்புக் குழுவினர் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் சம்பவ இடத்துக்குச் சென்றுள்ளனர். விரைவில் அதைச் சரிசெய்ய அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர்.

ரஞ்சித், மாரி செல்வராஜ் ஜாதியவாதத்தை உயர்த்திப் பிடிப்பவர்கள் அல்ல: தொல். திருமாவளவன்

இன்னும் ஒரு மணி நேரத்தில் அது சீரமைக்கப்படும். சம்பவத்திற்கான சரியான காரணம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்படும் என்றார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதுடன் ரயில் போக்குவரத்தும் சிறிது நேரம் பாதிக்கப்பட்டுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024