Saturday, September 21, 2024

ஓணம்: பிரதமர், முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் வாழ்த்து

by rajtamil
0 comment 4 views
A+A-
Reset

கேரள மாநிலத்தில் இன்று (செப். 15) ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையடுத்து, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பிரதமர் மோடி, தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட பலரும் ஓணம் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

தமிழக முதல்வர் ஸ்டாலின், தனது எக்ஸ் பக்கத்தில் “உலகெங்கிலும் உள்ள எனது மலையாள சகோதரர்களுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்.

ஒரு பெரிய இயற்கைப் பேரழிவின் தாக்கத்திலிருந்து மீண்டு வரும் கேரளாவில் உள்ள எனது திராவிட சகோதர, சகோதரிகளுக்கு இந்த பண்டிகை காலம், நம்பிக்கையையும் வலிமையையும் கொண்டு வரட்டும்.

இந்த ஓணம், மலையாளிகளின் ஒற்றுமையையும் உயிர்வாழ்வையும் பிரதிபலிக்கட்டும்’’ என்று கூறி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ലോകമെമ്പാടുമുള്ള എൻ്റെ മലയാളി സഹോദരങ്ങൾക്ക് ഹൃദയം നിറഞ്ഞ #ഓണാശംസകൾ!
വലിയൊരു പ്രകൃതി ദുരന്തത്തിന്റെ ആഘാതത്തിൽ നിന്ന് കരകയറുന്ന കേരളത്തിലെ എൻ്റെ ദ്രാവിഡ സഹോദരങ്ങൾക്ക് ഈ ഉത്സവകാലം പ്രത്യാശയും ശക്തിയും നൽകട്ടെ.
ഈ ഓണക്കാലം മലയാളികളുടെ ഒത്തൊരുമയുടെയും അതിജീവനത്തിന്റെയും… pic.twitter.com/52ppKMnETW

— M.K.Stalin (@mkstalin) September 15, 2024

தொடர்ந்து, பிரதமர் மோடி, “அனைவருக்கும் இனிய ஓணம் பண்டிகை வாழ்த்துக்கள். எல்லா இடங்களிலும் அமைதி, செழிப்பு மற்றும் ஆரோக்கியம் நிலவட்டும். இந்த திருவிழா கேரளத்தின் புகழ்பெற்ற கலாசாரத்தை கொண்டாடுகிறது’’ என்று வாழ்த்து கூறியுள்ளார்.

ഏവർക്കും സന്തോഷകരമായ ഓണം ആശംസിക്കുന്നു. എങ്ങും സമാധാനവും സമൃദ്ധിയും ക്ഷേമവും ഉണ്ടാകട്ടെ. കേരളത്തിന്റെ മഹത്തായ സംസ്ക്കാരം ആഘോഷിക്കുന്ന ഈ ഉത്സവം ലോകമെമ്പാടുമുള്ള മലയാളി സമൂഹം ആവേശത്തോടെ ആഘോഷിക്കുന്നു.

— Narendra Modi (@narendramodi) September 15, 2024

மேலும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தனது எக்ஸ் பக்கத்தில் “அனைவருக்கும் மகிழ்ச்சியான மற்றும் வளமான ஓணம் வாழ்த்துக்கள். இந்த அழகான திருவிழாவின் மகிழ்ச்சியான உணர்வு உங்கள் வாழ்க்கையில் புதிய தொடக்கங்களையும் மகிழ்ச்சியையும் கொண்டு வரட்டும்’’ என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Wishing everyone a happy and prosperous Onam!
May the joyous spirit of this beautiful festival bring new beginnings and happiness to your life. pic.twitter.com/KkhlmJmNr1

— Rahul Gandhi (@RahulGandhi) September 15, 2024

மலையாள சொந்தங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த #ஓணம் நல்வாழ்த்துகள்!
എന്റെ സ്വന്തം മലയാളി സുഹൃത്തുക്കൾക്ക് ഹൃദയം നിറഞ്ഞ ഓണാശംസകൾ.#HappyOnam!

— TVK Vijay (@tvkvijayhq) September 15, 2024

இவர்களைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், “மலையாள சொந்தங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த ஓணம் நல்வாழ்த்துகள்’’ என்று வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

கேரள மக்களால் ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வரும் பண்டிகைகளில் ஓணம் பண்டிகை மிக முக்கியமானது. கொல்லவர்ஷம் எனும் மலையாள ஆண்டின் சிங்கம் மாதத்தில் ஹஸ்த்தம் நட்சத்திரத்தில் தொடங்கி திருவோணம் நட்சத்திரம் வரை 10 நாட்கள் ஓணம் கொண்டாடப்படுகிறது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024