ஓணம் விடுமுறை: சென்னையிலிருந்து நாளை சிறப்பு ரயில்கள் இயக்கம்

by rajtamil
Published: Updated: 0 comment 11 views
A+A-
Reset

கேரளத்தில் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை, ஞாயிற்றுக்கிழமை(செப். 15) கொண்டாடப்படுகிறது. இதையடுத்து சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக சென்னையிலிருந்து வெள்ளிக்கிழமை(செப். 13) சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருவனந்தபுரத்தின் கொச்சுவேலிக்கு சிறப்பு ரயில்(06160) நாளை(செப். 13) பிற்பகல் 3.15 மணிக்கு புறப்படுகிறது. இந்த ரயில் கொச்சுவேலிக்கு மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்றடையும்.

இந்த ரயில் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர்(கோவை), பாலக்காடு, திருச்சூர், ஆலுவா, எர்ணாகுளம் டவுன், கோட்டயம், சங்கனாசேரி, திருவல்லா, செங்கன்னூர், மாவேலிக்கரா, காயங்குளம், கொல்லம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

மேற்கண்ட ரயிலுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.

அதேபோல, நாளை(செப். 13) பிற்பகல் 3.10 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மங்களூருக்கு சிறப்பு ரயில்(06161) புறப்படுகிறது. இந்த ரயில் மங்களூருக்கு மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்றடையும்.

இந்த ரயில் பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, சொரனூர், திரூர், கோழிக்கோடு, வடகரா, தலசேரி, கண்ணூர், பையனூர், நீலேஸ்வரம், காசர்கோடு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமார்க்கத்தில், இந்த சிறப்பு ரயில்(06162) ஞாயிற்றுக்கிழமை(செப்.15) மாலை 6.45 மணிக்கு மங்களூரிலிருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 11.40 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை சென்றடையும்.

கண்ணூருக்கும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து சிறப்பு ரயில்(06163) சனிக்கிழமை(செப். 14) இரவு 11.50 மணிக்கு புறப்படுகிறது. இந்த ரயில் மங்களூருக்கு மறுநாள் பகல் 1.30 மணிக்கு சென்றடையும்.

இந்த ரயில் பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, சொரனூர், திரூர், கோழிக்கோடு, வடகரா, தலசேரி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமார்க்கத்தில், திங்கள்கிழமை(செப்.16) கண்ணூரிலிருந்து பகல் 3.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில்(06164) மறுநாள் காலை 7.55 மணிக்கு சென்றடையும்.

மேற்கண்ட ரயில்களுக்கான முன்பதிவு விரைவில் தொடங்கவுள்ளது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024