Saturday, September 21, 2024

ஓமனில் எண்ணெய் கப்பல் கவிழ்ந்தது; 13 இந்தியர்களின் கதி என்ன…?

by rajtamil
0 comment 13 views
A+A-
Reset

பிரெஸ்டீஜ் பால்கன் என்ற பெயரிடப்பட்ட எண்ணெய் கப்பல் ஏமன் நாட்டின் துறைமுக நகரான ஏடன் நோக்கி சென்று கொண்டு இருந்துள்ளது.

ஏடன்,

ஓமன் நாட்டின் கடலோர பகுதியில் துகம் என்ற துறைமுக நகர் உள்ளது. அந்நாட்டின் எண்ணெய் மற்றும் எரிவாயு சுரங்க தொழில்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இந்த நகரருகே ராஸ் மத்ரகா என்ற இடத்தில் இருந்து தென்கிழக்கே 25 கடல் மைல்கள் தொலைவில் எண்ணெய் கப்பல் ஒன்று திடீரென கவிழ்ந்தது.

இதுபற்றி ஓமனின் கடல்வழி பாதுகாப்பு மையம் வெளியிட்ட செய்தியில், இந்த கப்பலில் 13 இந்தியர்கள் உள்பட 16 பேர் பயணித்து உள்ளனர். மற்ற 3 பேரும் இலங்கையை சேர்ந்தவர்கள் ஆவர்.

இந்த கப்பல் ஏமன் நாட்டின் துறைமுக நகரான ஏடன் நோக்கி சென்று கொண்டு இருந்துள்ளது. 117 மீட்டர் நீளத்துடன் எண்ணெய் பொருட்களை ஏற்றி செல்ல கூடிய வகையில் 2007-ம் ஆண்டில் இந்த கப்பல் தயாரிக்கப்பட்டு உள்ளது.

பிரெஸ்டீஜ் பால்கன் என்ற பெயரிடப்பட்ட கோமரோஸ் நாட்டின் கொடியுடன் கூடிய அந்த எண்ணெய் கப்பல் கவிழ்ந்ததில், காணாமல் போனவர்களை தேடும் மற்றும் மீட்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

You may also like

© RajTamil Network – 2024