ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரி ஜாபர்சேட்டுக்கு எதிரான அமலாக்க துறை வழக்கு ரத்து

by rajtamil
0 comment 9 views
A+A-
Reset

ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரி ஜாபர்சேட்டுக்கு எதிரான அமலாக்க துறை வழக்கு ரத்து

சென்னை: கடந்த 2006-11 திமுக ஆட்சிக் காலத்தில் சென்னை திருவான்மியூரில் வீட்டுவசதி வாரிய வீட்டுமனையை முறைகேடாக பெற்றதாக ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி ஜாபர்சேட் மற்றும் அவரது மனைவி உள்ளிட்டோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை 2011-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்திருந்தது.

இந்த வழக்கின் அடிப்படையில், சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் ஜாபர்சேட் மீது அமலாக்கத் துறையும் கடந்த 2020-ல் வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ஜாபர்சேட் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

ஜாபர்சேட் தரப்பில், தனக்கு எதிரான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் 2019-ல் ரத்து செய்துள்ள நிலையில், அந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத் துறை பதிவு செய்துள்ள வழக்கை தொடர்ந்து நடத்த அனுமதிக்கக் கூடாது. தனது மனைவிக்கு எதிராக அமலாக்கத் துறை பதிவு செய்திருந்த வழக்கு ஏற்கெனவே ரத்து செய்யப்பட்டு உள்ள நிலையில், தன் மீதான வழக்கையும் ரத்து செய்ய வேண்டும் எனக் கோரப்பட்டது.

அதையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஜாபர்சேட்டுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர்.

You may also like

© RajTamil Network – 2024