ஓய்வை அறிவித்த பாகிஸ்தான் சுழல் பந்துவீச்சாளர்! ஆஸி. அணிக்காக விளையாட ஆசைப்பட்டவர்..!

by rajtamil
0 comment 3 views
A+A-
Reset

பாகிஸ்தானின் சுழல்பந்து வீச்சாளர் உஸ்மான் காதிர் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

31 வயதாகும் உஸ்மான் காதிர் சிறந்த லெக் ஸ்பின் வீசும் திறனுடையவர். இவரது தந்தை அப்துல் காதிர் தலைசிறந்த லெக் ஸ்பின்னராவார்.

ஒரேயொரு ஒருநாள் போட்டியில் விளையாடிய உஸ்மான் காதிர் 25 டி20களில் விளையாடி 32 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

2012இல் யு-19 உலகக் கோப்பையில் சிறப்பாக பந்துவீசினார். ஆஸ்திரேலிய அணிக்காக விளையாட விரும்பினார். 2018இல் பிக்பேஸில் வெஸ்டர்ன் ஆஸி., பெர்த் ஸ்கார்செர்ஸ் அணிக்காக விளையாடியதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: கால்பந்து வரலாற்றில் மெஸ்ஸி உலக சாதனை..!

2019இல் இவரது தந்தை இறந்ததும் மீண்டும் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் விருப்பம் தெரிவித்து விளையாடியதும் குறிப்பிடத்தக்கது.

கடைசியாக 2024இல் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடினார்.

ஓய்வு குறித்து உஸ்மான் காதிர் கூறியதாவது:

பாகிஸ்தான் கிரிக்கெட்டில் இருந்து இன்றுமுதல் ஓய்வு பெறுகிறேன். எனது சிறப்பான பயணத்துக்கு அனைவருக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். பாகிஸ்தான் நாட்டுக்காக விலையாடியது பெருமை. எனது பயிற்சியாளர் எனது அணியினருக்கும் நான் மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.

மறக்கமுடியாத வெற்றி, போராட்டங்களை நாம் சந்தித்து இருக்கிறோம். எல்லா கணங்களும் என்னை என் வாழ்வில் செழுமைப்படுத்தியிருக்கிறது. எனக்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி. நீங்கள்தான் எனது உலகம்.

எனது தந்தையின் பாரம்பரியத்தைப் பின் தொடர்ந்து நான் புதிய வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கிறேன். கிரிக்கெட்டிலும் எனது வாழ்க்கையில் அவர் கற்றுகொடுத்தது சிறப்பானவையே. பாகிஸ்தான் அணிக்காக விளையாடிய நினைவுகளை எப்போதும் மனதில் வைத்து மகிழ்வேன். அனைத்துக்கும் நன்றி.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024