Wednesday, October 23, 2024

ஓராண்டில் இரட்டிப்பான பாலஸ்தீன வறுமை நிலை: 74.3%

by rajtamil
0 comment 0 views
A+A-
Reset

பாலஸ்தீனத்தில் வறுமை நிலை விகிதம் கடந்த ஆண்டை விட இரட்டிப்பாகியுள்ளதாக ஐக்கிய நாடுகள் அவை அறிவித்துள்ளது.

ஓராண்டுக்கும் மேலாக காஸாவில் போர் நீடித்துவரும் நிலையில், பாலஸ்தீனத்தின் வறுமை நிலை விகிதம் 74.3 சதவீதமாக அதிகரித்துள்ளது என ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்ட அறிக்கை தெரிவித்துள்ளது.

கடந்த 2023ஆம் ஆண்டு இறுதியில் பாலஸ்தீனத்தில் வறுமையில் இருப்போர் விகிதம் 38.8 சதவீதமாக இருந்தது. ஆனால், இந்த ஆண்டில் இதுவரை 26 லட்சம் மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் வந்துள்ளனர். இதனால் பாலஸ்தீனத்தில் வறுமையில் இருப்போர் எண்ணிக்கை 41 லட்சமாக அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் அவையின் வளர்ச்சித் திட்டத் தலைவர் அச்சிம் ஸ்டெய்னர் தெரிவித்ததாவது,

போரின் உடனடி விளைவுகள் நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளான கட்டடங்கள் போன்றவை அழிவதோடு மட்டுமல்லாம, வறுமை விகிதத்திலும் பெரிதும் பாதிக்கிறது. மக்கள் வாழ்வாதாரத்தையே பாதிப்புக்குள்ளாக்குகிறது.

சமூக பொருளாதார மதிப்பீடுகள் மூலம் பார்த்தால், தற்போது ஏற்பட்டுள்ள சேதங்கள் பாலஸ்தீனத்தை பல ஆண்டுகளுக்கு பின்னோக்கித்தள்ளியுள்ளது.

பாலஸ்தீனத்தில் வேலையின்மை விகிதம் இந்த ஆண்டு 49.9 சதவீதமாக அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. காஸாவில் போர் இல்லாத சூழலை ஒப்பிடும்போது, ஜிடிபி வளர்ச்சி விகிதம் 35.1 சதவீதம் சரிந்துள்ளது.

இதையும் படிக்க | பாலஸ்தீன குழந்தைகள் உணவின்றி தவிப்பு: இந்தியாவிலிருந்து 30 டன் நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைப்பு!

பாலஸ்தீனத்துக்கு ஒவ்வொரு ஆண்டும் மனிதாபிமான உதவிகளை வழங்கிவந்தாலும், பாலஸ்தீன பொருளாதாரம் மீண்டும் அதன் முந்தைய இயல்புநிலைக்குத் திரும்புவது கடினம். இதற்கு 10 ஆண்டுகள் அதற்கு மேல் ஆகலாம் எனக் குறிப்பிட்டார்.

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை காஸாவில் 4.2 கோடி டன் கட்டடக் குவியல்கள் உருவாகியுள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.

கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் எல்லைகள் மீது காஸாவின் ஹமாஸ் படையினர் வான்வழித்தாக்குதல் நடத்தினர். இதில் இஸ்ரேலலில் 1,206 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

இதையும் படிக்க | அமெரிக்க அதிபர் தேர்தல்: தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வழிமுறைகள்

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024