Wednesday, October 30, 2024

ஓ.டி.டி.யில் வெளியாகும் நயன்தாரா வாழ்க்கையின் ஆவணப்படம்

by rajtamil
0 comment 0 views
A+A-
Reset

நயன்தாரா வாழ்க்கையின் ஆவணப்படத்திற்கு ‘நயன்தாரா: பியாண்ட் தி பேரி டேல்' என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழில் சரத்குமார் ஜோடியாக 'ஐயா' படத்தில் அறிமுகமான நயன்தாரா, இரண்டாவது படத்திலேயே ரஜினிகாந்தின் ஜோடியாகி 'சந்திரமுகி' படத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். தொடர்ந்து 20 வருடங்களுக்கும் மேலாக திரைத்துறையில் முன்னணியில் இருக்கிறார். தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக கொடி கட்டி பறக்கிறார்.

நடிகை நயன்தாராவும், பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து கடந்த 2022-ம் ஆண்டு மாமல்லபுரத்தில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய முழு திருமண நிகழ்ச்சியையும் வீடியோவில் பதிவு செய்து ஓ.டி.டி தளத்தில் சமீபத்தில் வெளியானது. இந்த தம்பதிக்கு தற்போது உயிர் மற்றும் உலகம் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

இதற்கிடையில் இவரது சிறுவயது வாழ்க்கை முதல் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தது வரை உள்ள சம்பவங்களை தொகுத்து ஒரு ஆவணப்படம் தயாராகி உள்ளது. எப்படி இந்த இடத்துக்கு உயர்ந்தேன் என்று விளக்கும் நயன்தாராவின் பேட்டியும், அவர் படப்பிடிப்பில் பங்கேற்கும் காட்சிகள், மேக்கப் போடுவது, விக்னேஷ் சிவனுடன் ஏற்பட்ட காதல் உள்ளிட்ட பல விசயங்களும் ஆவணப்படத்தில் இடம் பெறுகின்றன. நயன்தாரா குறித்து மற்றவர்கள் பேசும் பேட்டிகளும் இடம்பெறுகின்றன. அதோடு திருமண புகைப்படம் மற்றும் வீடியோவையும் ஆவணப்படத்தில் இணைத்து இருக்கிறார்கள். சமீபத்தில் இந்த ஆவணப்படத்தின் டிரெய்லர் வெளியானது. அதில் நயன்தாரா தன்னை சாதாரண பெண் என்று கூறியிருந்தார்.

இந்த ஆவணப்படத்திற்கு 'நயன்தாரா: பியாண்ட் தி பேரி டேல்' என்று தலைப்பிடப்பட்டுள்ளது. தற்போது இந்த ஆவணப்படத்தில் ஓ.டி.டி ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது. அதன்படி, வருகிற நவம்பர் மாதம் 18-ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.

Thirai-layum natchathiram, vaazhkailayum natchathiram ✨Watch Nayanthara: Beyond The Fairy Tale on 18 November, only on Netflix!#NayantharaOnNetflixpic.twitter.com/5m9UbBNZ6M

— Netflix India South (@Netflix_INSouth) October 30, 2024

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024