கங்கா தசரா விழா; வாரணாசியில் புனித நீராடி பக்தர்கள் வழிபாடு

by rajtamil
0 comment 40 views
A+A-
Reset

கங்கா தசரா விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் புனித நீராடி வழிபாடு செய்தனர்.

லக்னோ,

'ஜயேஸ்தா' மாதத்தில் வரும் சுக்ல பக்சத்தின் 10-வது நாளில் 'கங்கா தசரா' விழா கொண்டாடப்படுகிறது. இந்த நாளில்தான் கங்காதேவி சொர்க்கத்தில் இருந்து பூமிக்கு இறங்கி வந்ததாக இந்துமத புராணங்கள் கூறுகின்றன. இந்த நாளில் கங்கை நதியில் புனித நீராடினால் பாவங்கள் மற்றும் நோய்கள் அனைத்தும் நீங்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாக உள்ளது.

அந்த வகையில் இன்றைய தினம் 'கங்கா தசரா' விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு ஸ்ரீராம ஜென்மபூமி கோவிலில் இன்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஆயிரக்கணக்கானோர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வழிபாடு நடத்தினர். அதேபோல் அயோத்தியில் சரயு நதியிலும், வாரணாசியில் கங்கை நதியிலும் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்.

You may also like

© RajTamil Network – 2024