‘கங்குவா’ ரிலீஸ் எப்போது? படக்குழு வெளியிட்ட அப்டேட்!

by rajtamil
0 comment 9 views
A+A-
Reset

'கங்குவா' திரைப்படம் இன்னும் 2 மாதங்களில் ரிலீஸ் ஆகும் என தயாரிப்பாளர் தனஞ்செயன் கூறியுள்ளார்.

சென்னை,

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படத்தின் மேல் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதன் டிரெய்லர் வெளியாகி கவனம் பெற்றதால், சூர்யா – சிவா கூட்டணியில் உருவான கங்குவாவுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இப்படத்தை அக்டோபர் 10ம் தேதி வெளியிடுவதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. அதற்காக, இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான வேட்டையன் படமும் அக்டோபர் 10ம் தேதிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

ரஜினியின் வேட்டையன் திரைப்படமும் அதே தேதியில் வெளியாக உள்ளதால் 'கங்குவா' ரிலீஸ் தேதி தள்ளிப்போவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இணையவாசிகள் விமர்சனங்களை தெரிவித்து வந்தனர்.

நடிகர் சூர்யா "ரஜினிகாந்த் நடித்துள்ள 'வேட்டையன்' படத்திற்காக 'கங்குவா' படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்படுகிறது. மூத்தவர், சினிமாவின் அடையாளம், 50 ஆண்டுகளாக நடித்து வருகிறார் என்பதால் ரஜினிகாந்த் படத்திற்கு வழிவிடுவோம். 'கங்குவா' ஒரு குழந்தை. அதை நீங்கள் பார்த்துக் கொள்வீர்கள். 'கங்குவா' படத்தின் புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும்" என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் தயாரிப்பாளர் தனஞ்செயன் நேர்காணல் ஒன்றில் ' முதலில் அக்டோபர் 10ம் தேதி வெளியாகவிருந்தது. வேட்டையன் திரைப்படமும் அதே நாளில் வரவே ஞானவேல்ராஜா ரஜினி ரசிகர் என்பதால் கங்குவா படத்தை வேறு நாளில் வெளியாக திட்டமிட்டுள்ளார். ஹிந்தியில் மல்டிபிளக்ஸில் கங்குவா வெளியாகவுள்ளது. 3000க்கும் அதிகமான திரைகளில் வெளியாகவிருக்கிறது. வட இந்தியாவில் ஓடிடியில் 8 வாரங்களுக்குப் பிறகே வெளியாகும். தமிழ்ப் படங்கள் இந்த நெறிமுறைகளை ஏற்காததால் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் வெளியாகுவதில்லை. ஆனால், கங்குவா மிகப்பெரிய ரிலீஸுக்கு காத்திருக்கிறது. இன்னும் 2 மாதங்களில் கங்குவா ரிலீஸ் ஆகும். ஹிந்தியிலும் வெளியாகுவதால் அதற்கும் ஏற்றவாறு ரிலீஸ் தேதியை அமைக்க திட்டமிட்டு வருகிறார்கள்.' என கூறியுள்ளார்.

27 years of persistence, commitment and dedication with which you've carved a niche of unparalleled excellence Congratulations on completing 27 years in the industry #Suriya sir. Here’s to soaring higher ️ Wishes from Team #Kanguva#27YearsOfSuriya#27YearsOfSuryaism… pic.twitter.com/UYIE349cux

— Studio Green (@StudioGreen2) September 6, 2024

Original Article

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024