கஞ்சா தொடர்பான சர்ச்சை பேச்சு… சமாஜ்வாதி எம்.பி. மீது வழக்குப்பதிவு!

by rajtamil
0 comment 4 views
A+A-
Reset

கஞ்சாவை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்று மதத்துடன் தொடர்புபடுத்திப் பேசியதாக சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் அப்சல் அன்சாரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் காசிபூர் தொகுதி மக்களவை உறுப்பினரான அப்சல் அன்சாரி, கஞ்சாவை பலரும் வெளிப்படையாகப் பயன்படுத்துவதால் அதனை சட்டப்பூர்வமாக்க வேண்டும் எனப் பேசியிருந்தார்.

மேலும், மதம் சார்ந்த பண்டிகைகளில் ’கடவுளின் பிரசாதம்’ மற்றும் ’புனித மூலிகை’ என்ற பெயரில் கஞ்சா பயன்படுத்தப்படுகிறது. அதுமட்டுமின்றி கஞ்சா புகைப்பதால் பசி அதிகரிப்பதாகவும், உடல்நலன் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் கூறிய அவர் இதனால் கஞ்சாவை சட்டப்பூர்வமாக அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

பிரதமர் மோடியை அதிகாரத்திலிருந்து நீக்காமல் சாகமாட்டேன்..! – கார்கே

கும்பமேளாவில் அதிக அளவில் கஞ்சா பயன்படுத்தப்படுவதாகவும், சிவபெருமானுடன் தொடர்புடைய மற்றொரு போதைப் பொருளான ’பாங்கு’ சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்படுவது போல கஞ்சாவையும் ஏன் அனுமதிக்கக் கூடாது என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

அவரது கருத்துகள் பல தரப்பிலும் எதிர்ப்புகளை ஏற்படுத்தியது. இதற்கு மதத் தலைவர்கள் பலரும் அவரது கருத்திற்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.

வாட்ஸ் ஆப் இயக்குநர்கள் மீது வழக்கு பதிவு! – என்ன நடந்தது?

இதனைத் தொடர்ந்து, எம்பி அன்சாரி மீது கோரா பசார் புறக்காவல் நிலைய பொறுப்பாளர் ராஜ்குமார் சுக்லா என்பவரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அன்சாரியின் பேச்சு சட்டரீதியாக மட்டுமின்றி மதரீதியாகவும் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.

You may also like

© RajTamil Network – 2024