கடன் தொல்லையில் இருந்து விடுபட வழிகாட்டும் ஸ்ரீநிதீஷ்வரர்

by rajtamil
0 comment 26 views
A+A-
Reset

வெள்ளிக்கிழமை, பவுர்ணமி, பூச நட்சத்திரம், அட்சய திருதியை, தீபாவளி ஆகிய நாட்களில் சுவாமிக்கு சொர்ண புஷ்ப அர்ச்சனை செய்து வழிபடவேண்டும்.

விழுப்புரம் மாவட்டம் அன்னம்புத்தூரில் அமைந்துள்ளது ஸ்ரீநிதீஸ்வரர் ஆலயம். திண்டிவனத்தில் இருந்து விழுப்புரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கூட்டேரிப்பட்டு கிராமத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது அன்னம்புத்தூர். இத்தல இறைவனை பிரம்மதேவரும், நிதிகளுக்கு அதிபதியான குபேரனும் வழிபட்டு பேறு பெற்றுள்ளனர்.

இன்றைய உலகில் பலருக்கும் பிரச்சினையாக இருப்பது நிதிதான். இந்த சிக்கல்களுக்கு விடை தருபவராக ஸ்ரீநிதீஷ்வரராக எழுந்தருளியிருக்கிறார் சிவபெருமான்.

பிரம்மஹத்தி தோஷம் மற்றும் குரு சாபத்தால் பாதிக்கப்பட்டவர்கள், ஸ்ரீநிதீஸ்வரருக்கு வியாழக்கிழமையில் மஞ்சள் வஸ்திரம் சாற்றி, மஞ்சள் நிற பூக்களால் அர்ச்சித்து, ஐந்து நெய் தீபமேற்றி, ஐந்து முறை ஆலய வலம் வழிபட்டால், அந்த பாதிப்புகள் நீங்குவதுடன், பூர்வ ஜென்ம பாவங்களும் விலகும். மேலும் அவர்களின் இல்லத்தில் நிலவும் வறுமை நீங்கி, செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.

வெள்ளிக்கிழமை, பவுர்ணமி, பூச நட்சத்திரம், அட்சய திருதியை, தீபாவளி ஆகிய நாட்களில் சுவாமிக்கு சொர்ண புஷ்ப அர்ச்சனை செய்து வழிபட்டால், கடன் தொல்லைகளில் இருந்து விடுபடுவதற்கான வழியை சுவாமி காட்டுவதாக நம்பிக்கை. அதோடு மன அமைதி, வீடு, வாகன யோகம், திருமண வரம், குழந்தை வரம், தொழில் அபிவிருத்தி, உத்தியோகம் ஆகியவற்றையும் பெற்றிடலாம் என்கிறார்கள் பக்தர்கள்.

You may also like

© RajTamil Network – 2024