Saturday, September 28, 2024

கடலூர்: மருங்கூர் அகழாய்வில் பழங்கால பானை ஓடுகள் கண்டெடுப்பு

by rajtamil
0 comment 18 views
A+A-
Reset

மருங்கூர் அகழாய்வில் பழங்கால பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சென்னை,

தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-

கடலூர் மாவட்டம் மருங்கூர் அகழாய்வில் ராஜராஜன் கால செம்புக்காசு, சுடுமண்ணால் ஆன வட்டச்சில்லுகள், பச்சை நிறக் கண்ணாடி மணி ஆகியவை கிடைத்தன. இன்று 122செ.மீ ஆழத்தில் பழங்கால ரெளலட்டட் வகைப் பானை ஓடுகள் இரண்டு கிடைத்துள்ளன.

தமிழ்நாட்டில் அரிக்கமேடு, வசவசமுத்திரம், பூம்புகார், அழகன்குளம், கொற்கை, கீழடி ஆகிய இடங்களிலும் ஆந்திரா, ஒடிசா மாநிலக் கடற்கரை ஓரங்களில் உள்ள தொல்லியல் தளங்களிலும் இத்தகைய ரெளலட்டட் வகைப் பானை ஓடுகள் கிடைக்கின்றன.

பொதுவாக ரௌலட்டட் பானை ஓடுகள் உரோம நாட்டுப் பானைகள் எனக் கருதப்பட்டு வந்தன. தென்னிந்தியாவின் கிழக்குக் கடற்கரையை ஒட்டி வாழ்ந்த மக்களால் தயாரிக்கப்பட்ட மட்கலன்கள் என்று அண்மைக்கால ஆய்வுகள் கூறுகின்றன. இத்தகைய ரெளலட்டட் மட்கலன்கள் சங்க காலம் என்கின்ற தொடக்க வரலாற்றுக் காலத்தைச் சார்ந்தவை. எனவே, மருங்கூர் தொடக்க வரலாற்றுக் காலத்தைச் சார்ந்த தொல்லியல் தளம் என்பது உறுதிசெய்யப்படுகின்றது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024