Friday, September 20, 2024

கடவுள் இல்லாத ஆச்சரியக் கோவில்… இந்தியாவில் எங்குள்ளது தெரியுமா..?

by rajtamil
0 comment 18 views
A+A-
Reset

கடவுள் இல்லாத ஆச்சரியக் கோவில்… இந்தியாவில் எங்குள்ளது தெரியுமா..?கடவுள் இல்லாத கோவில்... காகதிய மன்னர்கள் கால கோவிலை காண குவியும் மக்கள்...

கடவுள் இல்லாத கோவில்… காகதிய மன்னர்கள் கால கோவிலை காண குவியும் மக்கள்…

இது ஒரு பழமையான கோவில். தெலங்கானா மாநிலத்தில் உள்ள இந்தக் கோவில் காகதிய மன்னர்களால் கட்டப்பட்டதாக உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். சரி இந்த பழமையான கோவில் எங்கே இருக்கிறது தெரியுமா? இதில் அப்படியென்ன விசேஷம் இருக்கிறது?

அந்தக் கோயிலில் உள்ள மூல விக்கிரகம் இப்போது எங்கே இருக்கிறது? காகதிய மன்னர்களால் கட்டப்பட்ட இந்தக் கோயிலின் கடவுள், இப்போது ஏன் கோயிலில் இல்லை! கோவில் இருக்கிறது; ஆனால் கடவுள் இல்லை. கேட்கவே ஆச்சர்யமாக இருக்கிறது அல்லவா! காகதிய காலத்தில் காகதிய மன்னர்களால் கட்டப்பட்ட இக்கோயில், மூலவிக்கிரகம் இல்லாமல் காட்சியளிக்கிறது. இது குறித்த விளக்கமாக இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

விளம்பரம்

ராஜண்ணா சிரிசில்லா மாவட்டத்தின் வெமுலாவாடா நகர்மண்டலத்தில் உள்ள கொடுமுஞ்சாவில் (பழைய கிராமம்) காகிதிய மன்னர்களால் கட்டப்பட்ட பழமையான ஸ்ரீ ராமப்ப ஸ்ரீ ராமலிங்கேஸ்வர ஸ்வாமி கோயில் உள்ளது. இங்கு சிறப்பு பூஜைகளும் தீப ஆராதனைகளும் பிரசாதங்களும் என கோவில் சுடர் மிகுந்து காணப்பட்டது. ஆனால் மானேரு நீர்த்தேக்கத்தை அரசு கையகப்படுத்திய பிறகு, திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் கொடுமுஞ்சா கிராமமும், கிராமத்தின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஸ்ரீ ராமலிங்கேஸ்வர சுவாமி கோயிலும் வெள்ளத்தில் மூழ்கின.

விளம்பரம்

இதையும் படிங்க: ஆங்கில அறிஞரின் நினைவாக ஊட்டியில் உள்ள பூங்கா… விளையாடக் காத்திருக்கும் குழந்தைகள்…

இந்த சமயத்தில் அரசாங்கம் மக்களை ஆர்&ஆர் காலனியில் குடியமர்த்தியது. இந்நிலையில் பழைய கிராமத்தில் இருந்து எடுத்து வரப்பட்ட மூலவிக்ரகத்தைக் கொண்டு வந்து, புதிய கிராமத்தில் பிரம்மாண்டமான கோயிலை கட்டினர். அன்றிலிருந்து கோயிலுக்கு சிறப்பாக பிரதிஷ்டை செய்து சிறப்பு பூஜைகள் செய்து வருவதாக இங்குள்ள மக்கள் கூறுகின்றனர்.

எனினும், மிட் மானூர் நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்ததால், வெள்ளத்தில் மூழ்கிய கிராமங்களுடன், ஸ்ரீராமப்ப ராமலிங்கேஸ்வர சுவாமி கோயிலும் மீட்கப்பட்டது. இத்தனை ஆண்டுகளாக தண்ணீரில் மூழ்கி இருந்த கோவில் மீண்டும் வெளியே தெரிவதால் பல்வேறு கிராமங்களில் இருந்து மக்கள் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். அதேசமயம் பல வருடங்கள் தண்ணீரில் மூழ்கியிருந்தும் கூட கோவிலுக்கு எந்த சேதமும் ஏற்படாமல் இன்னும் அப்படியே காட்சியளிக்கிறது என்று மக்கள் வியந்து கூறுகின்றனர்.

விளம்பரம்

அதிலுள்ள மூலவிக்கிரகம் என்ன ஆயிற்று? மறுகுடியேற்ற காலனியாக உள்ள ஆர்&ஆர் காலனியின் கொடுமுஞ்சா கிராமத்தில் புதிய கோயில் கட்டியபோது, கடவுள் ராமப்பன் ஸ்ரீராமலிங்கேஸ்வரரின் விக்ரகத்தை இங்கே புனருத்தாரணம் செய்துவிட்டனர். இதன் காரணமாக காகதிய மன்னர்களால் கட்டப்பட்ட கோயில் தற்போது இறைவன் இல்லாமல் காட்சியளிக்கிறது. கொடுமுஞ்சா கிராமத்தில் உள்ள ராமப்பா ஸ்ரீ ராமலிங்கேஸ்வர ஸ்வாமி கோவிலில் ஆண்டுதோறும் மகமாச திருவிழா கண் திருவிழாவாக வெகு விமரிசையாக நடக்கும் என அக்கிராமத்தைச் சேர்ந்த ரெகுல பரசுராமுலு கூறுகிறார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க

விளம்பரம்

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Local News
,
Telangana
,
Tourist spots

You may also like

© RajTamil Network – 2024