Sunday, October 20, 2024

கதாநாயகனாகும் மிஷ்கின்?

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

இயக்குநர் மிஷ்கின் கதாநாயகனாக நடிக்கவுள்ளதாகத் தகவல்.

தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாணியை உருவாக்கி நுட்பமான கதைகளை இயக்கி வருபவர் இயக்குநர் மிஷ்கின். சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, ஓநாயும் ஆட்டுக்குட்டியும் உள்ளிட்ட சிறந்த படங்களை இயக்கியவர். நந்தலாலா படத்தை இயக்கியதுடன் அவரே நாயகனாகவும் நடித்தார்.

இறுதியாக, உதயநிதி ஸ்டாலினை வைத்து சைக்கோ படத்தை இயக்கினார். அது, வரவேற்பைப் பெற்றது. அடுத்ததாக, பிசாசு – 2 படத்தை எடுத்தார். ஆனால், அப்படம் 2 ஆண்டுகளாகியும் திரைக்கு வரவில்லை.

இதையும் படிக்க: வேட்டையன் எப்படி இருக்கிறது? ரசிகர்கள் கருத்து!

தற்போது, விஜய் சேதுபதியை வைத்து டிரைன் என்கிற படத்தை இயக்கி வருகிறார். இதற்கிடையே சவரக்கத்தி, மாவீரன், லியோ உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்தார்.

இந்த நிலையில், மிஷ்கின் கதாநாயகனாக மீண்டும் நடிக்கவுள்ளார். இப்படத்தை, ரைட்டர் படத்தின் இயக்குநரான பிராங்க்ளின் ஜேக்கபின் உதவி இயக்குநரான கோகுல் இயக்குகிறார். விரைவில், படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024