தமிழில் சினிமாவில் 'முகமூடி' படம் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே.
சென்னை,
தமிழில் சினிமாவில் 'முகமூடி' படம் மூலம் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. பின்னர் 'பீஸ்ட்' படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார். கடந்த காலங்களில் பூஜா ஹெக்டே நடித்த சில படங்கள் தோல்வி அடைந்தன.
இதையடுத்து பூஜா ஹெக்டே அளித்துள்ள பேட்டியில், "நான் கதைகளை தேர்வு செய்வதில் ஏற்கனவே சில தவறுகள் செய்தேன். அந்த தவறுகள் மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொள்ளப்போகிறேன். என் கடந்த கால படங்களையெல்லாம் அலசி ஆராய்ந்து நான் என்ன தவறுகள் செய்தேன் என்று தெரிந்து கொண்டேன். தற்போது நான் சினிமாவில் கதைகள் தேர்வில் எனது அணுகுமுறையை முழுமையாக மாற்றிக் கொண்டேன்.
இனிமேல் கதைகள் தேர்வு விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருப்பேன். வித்தியாசமான கதைகளில் நடிக்க முக்கியத்துவம் கொடுப்பேன். அடுத்த ஆண்டு எனக்கு நிறைய வெற்றிகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறேன்'' என்று கூறியுள்ளார். தற்போது மகேஷ்பாபு ஜோடியாக ஒரு படத்திலும், சல்மான்கான் ஜோடியாக 'கிசிகா பாய் கிசிகா ஜான்' என்ற படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.