Saturday, September 21, 2024

கனடாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவு

by rajtamil
0 comment 10 views
A+A-
Reset

கனடாவின் வான்கூவர் தீவின் மேற்கு கடற்கரையில் இன்று காலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஒட்டாவா,

கனடாவின் வான்கூவர் தீவின் மேற்கு கடற்கரையில் இன்று காலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 8.09 மணியளவில் (அந்நாட்டு நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

10 கி.மீ. ஆழம் கொண்ட இந்த நிலநடுக்கம், முதலில் 6.6 ரிக்டர் அளவில் தீர்மானிக்கப்பட்டது, ஆனால் பின்னர் அது 6.4 ஆக குறைக்கப்பட்டது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை. நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் மேற்கு கடற்கரை பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. இந்த நிலநடுக்கதால் கட்டிடங்கள் அதிர்ந்ததையடுத்து அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.

You may also like

© RajTamil Network – 2024