கனமழை: விஷ உயிரினங்களைப் பிடிக்க வனத் துறையினர் நியமனம்!

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

மழைக்காலத்தில் வீடுகளுக்குள் பாம்பு உள்ளிட்ட உயிரினங்கள் வர வாய்ப்புள்ளதால், வனத்துறை அலுவலர்களை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

வனத்துறை வாயிலாக உடனடி நடவடிக்கை எடுப்பதற்காக பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் மாவட்ட அவசர கட்டுப்பாட்டு அறையில் வனத்துறை அலுவலர்கள் சுழற்சி முறையில் பணியாற்றுவார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளது,

இது தொடர்பாக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வடகிழக்கு பருவமழை காலத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் அருகிலுள்ள திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை மற்றும் மதுரை மாவட்டத்திற்குப்பட்ட பகுதிகளில் கனமழை காரணமாக வெள்ள காலங்களில் நீர்பெருக்கு அதிகரிக்கும்போது பாம்பு மற்றும் இதர வன உயிரினங்கள் வீடு மற்றும் குடியிருப்பு பகுதிகளில் நுழைய வாய்ப்புள்ளது.

இத்தகைய இனங்களில் வனத்துறை வாயிலாக உடன் நடவடிக்கை எடுப்பதற்காக பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் மாவட்ட அவசர கட்டுப்பாட்டு அறையில் வனத்துறை அலுவலர்களை சுழற்சி முறையில் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

பெருநகர சென்னை மாநகராட்சியின் வெள்ளத் தடுப்பு கட்டுப்பாட்டு அறை இலவச உதவி எண் 1903-க்கும் மற்றும் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில், மாவட்ட அவசர கட்டுப்பாட்டு அறை எண் 1077 என்ற உதவி எண்ணில் மக்கள் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024