Friday, September 20, 2024

கனிமொழி எம்.பியை நேரில் சந்தித்து வரலட்சுமியின் திருமண அழைப்பிதழை வழங்கிய ராதிகா

by rajtamil
0 comment 29 views
A+A-
Reset

நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கும், மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் நிகோலய் சச்தேவுக்கும் கடந்த மார்ச் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

சென்னை,

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கிய 'போடா போடி' திரைப்படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் வரலட்சுமி சரத்குமார். இயக்குனர் பாலா இயக்கிய 'தாரை தப்பட்டை' திரைப்படம் வரலட்சுமிக்கு சிறந்த கம்பேக்காக அமைந்தது. இந்த படத்தை தொடர்ந்து விக்ரம் வேதா, சர்க்கார் உள்ளிட்ட பல படங்களில் வரலட்சுமி குணசித்திர வேடத்திலும், வில்லியாகவும் நடித்து மிரட்டி இருந்தார்.

நடிகர் சரத்குமாரின் மகளும், நடிகையுமான வரலட்சுமி சரத்குமாருக்கும், மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் நிகோலய் சச்தேவுக்கும் இருவீட்டார், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் கடந்த மார்ச் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. வரலட்சுமியின் திருமணம் அடுத்த மாதம் (ஜூலை 2-ம் தேதி) தாய்லாந்தில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனை தொடர்ந்து திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் நேற்று சரத்குமார் குடும்பத்தினர் நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து வரலட்சுமி திருமண அழைப்பிதழை கொடுத்து திருமணத்திற்கு அழைப்பு விடுத்தனர்.

இந்த நிலையில் இன்று நடிகை ராதிகா மற்றும் வரலட்சுமி சரத்குமார் இருவரும் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி எம்.பி. கனிமொழி கருணாநிதி மற்றும் ராசாத்தி அம்மாளை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழை வழங்கினர். இது தொடர்பான புகைப்படங்களை வரலட்சுமி சரத்குமார் தன்னுடைய சமூக வலைத்தளபக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Such a dynamic personality..Lovely meeting you mam..such a pleasure always.. @KanimozhiDMK congratulations on your win as well…thank you Rajithiamma for meeting with [email protected]/4eO0DGyb8m

— (@varusarath5) June 7, 2024

You may also like

© RajTamil Network – 2024