கனியாமூர் கலவரம்: மாணவியின் தாயாரை ஏன் விசாரிக்கவில்லை? நீதிமன்றம்

by rajtamil
0 comment 17 views
A+A-
Reset

கனியாமூர் கலவரம்: மாணவியின் தாயாரை ஏன் விசாரிக்கவில்லை? நீதிமன்றம்கனியாமூர் பள்ளி கலவரம் வழக்கில் தாயாரை விசாரிக்க நல்ல நாளுக்காக காத்துக்கொண்டிருக்கிறீர்களா? என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.கனியாமூர் கலவரம்: மாணவியின் தாயாரை ஏன் விசாரிக்கவில்லை? நீதிமன்றம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் பள்ளி மாணவி மரணமடைந்த சம்பவத்தில், பள்ளியில் நடந்த கலவரம் தொடர்பான வழக்கில், மாணவியின் தாயாரிடம் விசாரணை நடத்த நல்ல நாளுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறீர்களா? என்று உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது.

கனியாமூரில், தனியார் பள்ளி மீது நடத்தப்பட்ட தாக்குதலில், மாணவியின் தாய் மற்றும் திராவிட மணி ஆகியோர்தான் காரணம் என்று மனுதாரர் வாதத்தை முன் வைத்தார்.

இது குறித்து காவல்துறை சார்பில், மாணவியின் தாயாரிடம் விசாரிக்கப்படவில்லை என்று பதில் கொடுக்கப்பட்டதையடுத்து, சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும், ஏன் மாணவியின் தாயாரிடம் விசாரணை நடத்தப்படவில்லை என்றும், நல்ல நாளுக்காகக் காத்திருக்கிறீர்களா என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அவ்வளவு பெரிய கூட்டம் எப்படி பள்ளி வளாகத்தில் கூடியது என்ற கேள்விக்கு, வாட்ஸ்ஆப் மூலமே அங்கு மக்கள் குவிந்ததாக காவல்துறை தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆதாரம் இருந்தால் மாணவியின் தாய் மற்றும் திராவிடமணி ஆகியோர் குற்றவாளிகளாக சேர்க்கப்படுவர் என்றும் காவல்துறையினர் உறுதி அளித்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், கனியாமூரில் உள்ள தனியாா் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த மாணவி 2022-ஆம் ஆண்டு ஜூலை 13-ஆம் தேதி பள்ளியின் மூன்றாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

2022 ஜூலை 17-ஆம் தேதி மாணவி மரணத்துக்கு பள்ளி நிா்வாகம்தான் காரணம் எனக் கூறி, பல்வேறு அமைப்பினா் போராட்டத்தில் ஈடுபட்டனா். ஒரு கட்டத்தில் போராட்டக்காரா்கள், பள்ளிக்குள் நுழைந்து, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை தீ வைத்து எரித்ததுடன், பொருட்களையும் திருடிச் சென்றனா். இந்த கலவரம் தொடா்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

You may also like

© RajTamil Network – 2024