சூரியனார் கோவில் ஆதீனம் மகாலிங்க சுவாமிகள் கர்நாடகாவில் பதிவு திருமணம் செய்து கொண்டதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆதீனம் மகாலிங்க சுவாமி பதிவு திருமண சான்றிதழை வெளியிட்டுள்ளார்.
திருவிடைமருதூர் அருகே சூரியனார் கோவில் ஆதீனம் மகாலிங்க தேசி பரமாச்சாரியார் சுவாமிகள், கர்நாடக மாநிலத்தில் ஹேமாஸ்ரீ(47) என்பவரை திருமணம் செய்துள்ள விவகாரம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ்நாட்டில் பெரும்பாலான ஆதீனங்கள் இல்லறம் தவிர்த்து துறவறம் மேற்கொண்டவர்கள்.
இந்த நிலையில், துறவறம் மேற்கொண்டிருந்த சூரியனார் கோவில் ஆதீனம் மகாலிங்க தேசி பரமாச்சாரியார் சுவாமிகள்(54) தற்போது 47 வயதுடைய ஹேமாஸ்ரீ என்பவரை கடந்த அக்டோபர் 10 ஆம் தேதி பதிவு திருமணம் செய்துகொண்டதாக வரும் தகவல் பேசுபொருளாக மாறியுள்ளது.
கர்நாடகாவில் சிவாக்கிர யோகிகள் மடம் தொடங்குவதற்காக இடம் கொடுத்த ஹேமாஸ்ரீ என்பவரையே திருமணம் செய்துகொண்டுள்ளார். இது தொடர்பான பதிவு சான்றிதழ் சமூக வலைதளங்களில் வைராலாகி வருகிறது.
ஹேமாஸ்ரீ மடத்தை நிர்வகிக்கவும், டிரஸ்டியாக செயல்படுவதற்கு ஏதுவாக பதிவு திருமணம் செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க |விஜய்யை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்: சத்தியநாராயண ராவ்
இதுகுறித்து சூரியனார் கோவில் ஆதீனம் மகாலிங்க பரமாச்சாரியார் சுவாமிகள் கூறியதாவது:
கன்னட பெண்ணைத் திருமணம் செய்துகொண்டது உண்மைதான. கர்நாடக மாநிலத்தில் சைவ மடம் இல்லை. அங்கு சைவ மடம் அமைப்பதற்கு ஹேமாஸ்ரீ இடம் அளித்தார். அவரையே அந்த மடத்தின் செயலாளராக(டிரஸ்டி) நியமித்திருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் தமிழ்நாட்டில் ஒரு சில ஆதீனங்கள் திருமணம் செய்து கொண்டு ஆதீன கர்த்தர்களாக இருப்பதாகவும், சூரியனார் கோவில் ஆதினம் மடாதிபதியாக தான் நீடிப்பதாகவும், கர்நாடக மாநில சைவ மடத்தின் செயலராக தனது மனைவி ஹேமாஸ்ரீ இருப்பார் என மகாலிங்க பரமாச்சாரியார் சுவாமிகள் கூறினார்.