கன்வார் யாத்திரை விவகாரம்.. மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் தீர்மான நோட்டீஸ்கள் நிராகரிப்பு

by rajtamil
0 comment 3 views
A+A-
Reset

புதுடெல்லி:

உத்தர பிரதேசத்தில் கன்வார் யாத்திரை வழித்தடத்தில் உள்ள உணவகங்கள் உள்ளிட்ட அனைத்து கடைகளிலும் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களின் பெயர்கள் கொண்ட பெயர்ப்பலகை வைக்கவேண்டும் என மாநில அரசு சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்ப எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முடிவு செய்திருந்தனர். இதற்காக மாநிலங்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்திருந்தனர். அதில், இன்று மாநிலங்களவையில் மற்ற அலுவலகளை ஒத்திவைத்துவிட்டு, உத்தர பிரதேச அரசு பிறப்பித்த உத்தரவு தொடர்பாக விதி 267-ன் கீழ் விவாதிக்கவேண்டும் என கூறியிருந்தனர்.

ஆனால் வழக்கமான அலுவல்களை நிறுத்திவிட்டு விவாதிக்கும் அளவுக்கு இந்த விவகாரம் முக்கியம் இல்லை எனக் கூறி, இந்த நோட்டீஸ்களை அவைத்தலைவர் ஜெகதீப் தன்கர் நிராகரித்தார்.

You may also like

© RajTamil Network – 2024