Tuesday, September 24, 2024

கமிந்து மெண்டிஸ் சதம்; இலங்கை 169 ரன்கள் முன்னிலை!

by rajtamil
0 comment 18 views
A+A-
Reset

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி உணவு இடைவேளையின்போது 169 ரன்கள் முன்னிலை பெற்றது.

இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. இரண்டு அணிகளும் முதல் இன்னிங்ஸில் விளையாடி முடித்துவிட்ட நிலையில், தற்போது இலங்கை அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை அணியின் முன்வரிசை ஆட்டக்காரர்களான நிஷான் மதுஷ்கா மற்றும் குசல் மெண்டிஸ் இருவரும் 0 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். அதன்பின், திமுத் கருணாரத்னே மற்றும் ஏஞ்சலோ மேத்யூஸ் இருவரும் ஜோடி சேர்ந்தனர்.

ஜஸ்பிரித் பும்ரா கோஹினூர் வைரம் போன்றவர், கேப்டன் சுமை வேண்டாம்: தினேஷ் கார்த்திக்

திமுத் கருணாரத்னே 27 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின் களமிறங்கிய கேப்டன் தனஞ்ஜெயா டி சில்வா 11 ரன்களில் ஆட்டமிழந்தார். இலங்கை அணி 95 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஏஞ்சலோ மேத்யூஸ் அரைசதம் எடுத்து ஆட்டமிழந்தார். அவர் 65 ரன்களில் ஆட்டமிழந்தார்.

மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 204 ரன்கள் எடுத்திருந்தது. கமிந்து மெண்டிஸ் 56 ரன்களுடனும், தினேஷ் சண்டிமால் 20 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

ஷிகர் தவானுக்கு கிரிக்கெட் வீரர்கள் புகழாரம்!

82 ரன்கள் முன்னிலையுடன் 4-வது நாள் ஆட்டத்தைத் தொடங்கிய இலங்கை அணி உணவு இடைவேளைக்கு முன்பாக 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 291 ரன்கள் எடுத்துள்ளது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கமிந்து மெண்டிஸ் சதம் அடித்து அசத்தினார். தினேஷ் சண்டிமால் அரைசதம் கடந்தார். உணவு இடைவேளையின்போது, கமிந்து மெண்டிஸ் 101 ரன்களுடனும், தினேஷ் சண்டிமால் 62 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இலங்கை அணி இங்கிலாந்தைக் காட்டிலும் 169 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

You may also like

© RajTamil Network – 2024