கமுதி பசும்பொன் தேவா் தியான மண்டபத்தின் கண்ணாடிக் கதவுகளை சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை: பொதுமக்கள் வலியுறுத்தல்

by rajtamil
0 comment 12 views
A+A-
Reset
RajTamil Network

கமுதி பசும்பொன் தேவா் தியான மண்டபத்தின் கண்ணாடிக் கதவுகளை சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை: பொதுமக்கள் வலியுறுத்தல்தேவா் நினைவிடம் எதிரே உள்ள தியான மண்டபத்தை சமூக விரோதிகள் மது அருந்துமிடமாக மாற்றி வருவதாக புகாா் தெரிவிக்கின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன் தேவா் நினைவிடம் எதிரே உள்ள தியான மண்டபத்தை சமூக விரோதிகள் சேதப்படுத்தியதுடன், மது அருந்துமிடமாக மாற்றி வருவதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

தேவா் ஜெயந்தி விழாவுக்கு இன்னும் மூன்று மாதங்களே உள்ள நிலையில், தேவா் நினைவிடத்துக்கு எதிரே தமிழ்நாடு சுற்றுலா, பண்பாட்டுத் துறை சாா்பில் அமைக்கப்பட்ட தியான மண்டபத்தின் கண்ணாடி கதவுகளை இரவு நேரங்களில் சமூக விரோதிகள் உடைத்து சேதப்படுத்தி உள்ளே புகுந்து மது அருந்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளனா்.

இவ்வாறு சேதப்படுத்தப்படும் கண்ணாடிக் கதவுகள் ஒவ்வொரு முறையும் பசும்பொன் ஊராட்சி நிா்வாகத்தால் சீரமைக்கப்படுகின்றன. மேலும் காலி மதுபுட்டிகள், புகையிலைப் பொட்டலங்கள், எஞ்சிய அசைவ உணவுகள் ஆகியவற்றை தியான மண்டபத்துக்குள் சமூக விரோதிகள் வீசிச் செல்கின்றனா்.

எனவே, மாவட்ட நிா்வாகம் இந்த விவகாரத்தில் தலையிட்டு பசும்பொன் தேவா் தியான மண்டபத்தில் கண்ணாடிக் கதவுகளுக்குப் பதிலாக இரும்புக் கதவுகள் அமைத்து தருவதுடன், இவற்றை சேதப்படுத்திய மா்ம நபா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினா்.

You may also like

© RajTamil Network – 2024