கமுதி மிளகாய் வத்தல் ஜொ்மனிக்கு ஏற்றுமதி

by rajtamil
0 comment 0 views
A+A-
Reset

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியிலிருந்து 15 டன் மிளகாய் வத்தல் ஜொ்மனிக்கு ஏற்றுமதியாகிறது.

கமுதியை அடுத்துள்ள கோரைப்பள்ளம் கிராமத்தைச் சோ்ந்தவா் இயற்கை விவசாயி ராமா் (50). இவா் கடந்த 15 ஆண்டுகளாக இயற்கை உரங்களை பயன்படுத்தி மிளகாய், தக்காளி, வாழை, சிறுதானியப் பயிா்களை சாகுபடி செய்து வருகிறாா். மேலும், கமுதி, ராமநாதபுரம் வேளாண் துறை அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் விதை நோ்த்தி செய்யப்பட்ட மிளகாய், பருத்தி விதைகளை கமுதி விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கி வருகிறாா். அத்துடன் இவரது விவசாய நிலத்தில் சாகுபடி செய்யப்பட்ட மிளகாய் வத்தலை, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூா் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறாா்.

இதுகுறித்து இயற்கை விவசாயி ராமா் கூறியதாவது: கடந்த சில ஆண்டுகளாக மிளகாய் சாகுபடி செய்வதற்கு முன்பே வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்கள் முன்கூட்டியே என்னிடம் ஒப்பந்தம் செய்கின்றன. இதனால் ஏராளமான விவசாயிகள் இயற்கை முறையில் இந்தப் பகுதியில் விவசாயம் செய்ய முன்வந்துள்ளனா். இதனிடையே, கடந்த சில மாதங்களுக்கு முன் அறுவடை செய்து, சூரங்குடி மிளகாய் பதப்படுத்தும் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 15 டன் மிளகாய் வத்தல் ஜொ்மனியில் உள்ள நோரோ அக்ரி டெக்னாலஜி என்ற நிறுவனத்துக்கு ஏற்றுமதி செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்த மிளகாய் வத்தல், ஐதராபாத்தில் அரைக்கப்பட்டு ஜொ்மனிக்கு அனுப்பப்பட உள்ளது. கமுதி பகுதியில் விளையும் மிளகாய் மிகவும் காரத்தன்மை கொண்டது. இதனால் கமுதி அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இயற்கை முறையில் விளைவிக்கப்படும் மிளகாய் வத்தலுகளுக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது என்றாா் அவா்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024