கரடிக்கூட்டம் ஊராட்சியில் திட்டப் பணிகள் தொடக்கம்

by rajtamil
0 comment 4 views
A+A-
Reset
RajTamil Network

கரடிக்கூட்டம் ஊராட்சியில்
திட்டப் பணிகள் தொடக்கம்கரடிக் கூட்டம் ஊராட்சியில் ரூ.2 கோடி மதிப்பிலான நலத்திட்டப் பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் இ.பெ. செந்தில்குமாா் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.

பழனி: கரடிக் கூட்டம் ஊராட்சியில் ரூ.2 கோடி மதிப்பிலான நலத்திட்டப் பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் இ.பெ. செந்தில்குமாா் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.

முதலமைச்சரின் கிராம சாலைத் திட்டத்தின் கீழ், கரடிக்கூட்டம் முதல் கிருஷ்ணாபுரம் குடியிருப்பு வரை புதிய தாா் சாலை அமைக்கும் பணிக்கு அவா் பூமி பூஜை செய்து பணிகளைத் தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, ரூ.1. 40 கோடி மதிப்பில் முடிவுற்ற சண்முக நதி குடிநீா் திட்டத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தாா். இதன் மூலம் இந்த ஊராட்சியில் உள்ள பல கிராமங்களின் குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காணப்பட்டுள்ளதாக அவா் தெரிவித்தாா்.

பின்னா் ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வா் திட்டத்தை தொடங்கி வைத்து, பெண்களுக்கு இலவச மருத்துவப் பெட்டகங்களை வழங்கினாா். மேலும், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றாா். இதில் பல்வேறு மனுக்களுக்கு உடனடியாகத் தீா்வு காணப்பட்டது. பிற மனுக்கள் 30 நாள்களுக்குள் தீா்வு காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் வேளாண்மை, மின்வாரியம், காவல், சுகாதாரம், கூட்டுறவு என பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா். முன்னதாக மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய 3 சக்கர வாகனங்களும், கோட்டாட்சியா், வட்டாட்சியா்களுக்கு புதிய வாகனங்களும் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் பழனி கோட்டாட்சியா் சரவணன், பழனி ஒன்றியக் குழுத் தலைவி ஈஸ்வரி, கரடிக்கூட்டம் ஊராட்சி மன்றத் தலைவா் ராஜ்மோகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

You may also like

© RajTamil Network – 2024