‘கருணாநிதியை விட ஸ்டாலின் ஆபத்தானவர் என எதிரிகளுக்கு அச்சம்’ – திருமாவளவன்

கருணாநிதியை விட ஸ்டாலின் ஆபத்தானவர் என்ற அச்சம் எதிரிகளுக்கு இருப்பதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

கருணாநிதியைவிட கொள்கை பகைவர்களுக்கு ஆபத்தான பேராளுமையாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இருப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது;-

"முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி சந்தித்த நெருக்கடிகளை விட அதிக நெருக்கடிகளை சந்திக்கும் நிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தள்ளப்பட்டுள்ளார். இருப்பினும், அனைத்து நெருக்கடிகளையும் அவர் தாக்குப்பிடித்து நிற்பார்.

கருணாநிதியை விட ஸ்டாலின் மிகவும் ஆபத்தானவர் என எதிரிகள் சொல்கிறார்கள் என்றால், அவர்கள் எந்த அளவிற்கு அச்சம் அடைந்துள்ளார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். கருணாநிதியைவிட கொள்கை பகைவர்களுக்கு ஆபத்தான பேராளுமையாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளங்குகிறார்.

தி.மு.க.வுடன் கட்டாயம் இருந்தே ஆக வேண்டும் என்ற தேவை கம்யூனிஸ்டுகளுக்கோ, காங்கிரஸ் கட்சிக்கோ அல்லது வி.சி.க.வுக்கோ இல்லை. ஆனாலும் நாங்கள் தி.மு.க.வுடன் இருப்பதற்கு காரணம் மு.க.ஸ்டாலினின் தலைமைதான்."

இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Related posts

470 ஏக்கர் பரப்பில் புதிய கார் உற்பத்தி ஆலை: மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

Mumbai: Revd Dr. Ananda Maharajan’s Book On Tamil Christian Heritage To Be Released Today At St. John’s Tamil Church In Goregaon

Mumbai: After Bomb Threat To Haji Ali Dargah, Police Tighten Security Measures At Religious Sites And Major Crowded Areas