கருணாநிதி நினைவு நாணயம் வெளியீட்டு விழா: ராகுல் காந்திக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி

by rajtamil
0 comment 15 views
A+A-
Reset

கருணாநிதி நினைவு நாணயம் வெளியீட்டு விழாவுக்கு வாழ்த்து தெரிவித்த ராகுல் காந்திக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

சென்னை,

மறைந்த தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணயம் வெளியீட்டு விழா தமிழக அரசு சார்பில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று மாலை 6.50 மணிக்கு நடைபெறுகிறது. இந்த விழாவில் மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத்சிங் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கருணாநிதி நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணயத்தை வெளியிடுகிறார்.

இந்த விழாவுக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். இந்த விழாவில் பங்கேற்க கூட்டணி கட்சித் தலைவர்கள் மட்டுமின்றி எதிர்க்கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.

இந்த நிலையில், கருணாநிதி நினைவு நாணயம் வெளியீட்டு விழாவுக்கு வாழ்த்து தெரிவித்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "முத்தமிழ் அறிஞர் கலைஞர் நினைவு நாணயம் வெளியீட்டு விழாவின் முக்கியத்துவம் குறித்த அன்பான வாழ்த்துகளுக்கு, சகோதரர் ராகுல்காந்திக்கு மனமார்ந்த நன்றி. கலைஞரின் கனவுகளை நனவாக்க நாம் தொடர்ந்து ஒன்றிணைவோம்!" என்று தெரிவித்துள்ளார்.

Sincere thanks, dear brother Thiru. @RahulGandhi, for your warm wishes on the significance of Muthamizh Arignar Kalaignar Commemorative Coin release ceremony. Let us continue to work together to fulfill his dreams!#KalaignarForeverpic.twitter.com/TcijyldpFK

— M.K.Stalin (@mkstalin) August 18, 2024

You may also like

© RajTamil Network – 2024