கர்நாடகத்தில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு!

by rajtamil
0 comment 7 views
A+A-
Reset

கர்நாடகத்தில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு!ஒரே நாளில் 487 பேர் பாதிப்பு

கர்நாடகத்தில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது.

கர்நாடகத்தில் கடந்த ஜனவரி முதல் தற்போது வரையில் டெங்கு காய்ச்சலால் சுமார் 10,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி, கடந்த 24 மணி நேரத்தில் 487 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கர்நாடக சுகாதாரத் துறையின் அளித்த தகவலின்படி, இந்தாண்டில் மட்டும் 10,449 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

358 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்; மேலும், இதுவரையில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்ததாவது, டெங்கு பரவுவதை தடுக்க கர்நாடக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இனிவரும் காலங்களில் பருவமழை காரணமாக டெங்கு இன்னும் தீவிரமாக வாய்ப்புள்ளதால், மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

You may also like

© RajTamil Network – 2024