Saturday, September 21, 2024

களத்தில் கோபத்தை வெளிப்படுத்திய ரஷீத்… தண்டனையை அறிவித்த ஐ.சி.சி.. என்ன நடந்தது..?

by rajtamil
0 comment 14 views
A+A-
Reset

வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் களத்தில் கோபமடைந்த ரஷீத் கான், சக வீரரை நோக்கி தனது கையிலிருந்த பேட்டை தூக்கி எறிந்தார்.

கிங்ஸ்டவுன்,

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடர் வரும் 29-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இதன் இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக ஆப்கானிஸ்தானை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா தகுதி பெற்றுள்ளது. மற்றொரு அணி எது என்பதை தீர்மானிக்கும் ஆட்டத்தில் இந்தியா – இங்கிலாந்து பலப்பரீட்சை நடத்த உள்ளன.

முன்னதாக இந்த தொடரில் நடைபெற்ற சூப்பர் 8 சுற்றின் கடைசி ஆட்டத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறி வரலாறு படைத்தது. ஆப்கானிஸ்தான் அந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றதால் ஆஸ்திரேலியா இந்த தொடரிலிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.

இத்தகைய பரபரப்பான சூழலில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது. அப்போது 20-வது ஓவரை சந்தித்த ரஷீத் கான் 2 ரன்கள் எடுக்க முயற்சித்தார். ஆனால் எதிர்ப்புறம் கொஞ்சம் மெதுவாக ஓடிய மற்றொரு ஆப்கானிஸ்தான் வீரர் கரீம் ஜனத் 2-வது ரன்னை வேண்டாம் என்று சொல்லி விட்டார். அதனால் கோபமடைந்த ரஷீத் கான் அவரை நோக்கி தனது கையிலிருந்த பேட்டை தூக்கி எறிந்தார்.

நல்லவேளையாக பேட் ஜனத் மேல் படவில்லை. இருப்பினும் "பேட், பந்து போன்ற உபகரணத்தை பயன்படுத்தி களத்தில் இருக்கும் ஒரு வீரருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் ரஷீத் கான் நடந்து கொண்டார்" என்ற 2.9 விதிமுறையை மீறியதற்காக ஒரு கருப்பு புள்ளியை ஐ.சி.சி தண்டனையாக அறிவித்துள்ளது.

View this post on Instagram

A post shared by ICC (@icc)

You may also like

© RajTamil Network – 2024