கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார விழா

by rajtamil
0 comment 10 views
A+A-
Reset
RajTamil Network

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில்
உலக தாய்ப்பால் வார விழா கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு வியாழக்கிழமை பரிசு வழங்கும் கல்லூரி முதல்வா் (பொ) ச.நேரு. உடன் ரோட்டரி சங்கத் தலைா் கே.கே.ராஜேந்திரன்.

கள்ளக்குறிச்சி, ஆக.8:

கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி ரோட்டரி சங்கம், இன்னா்வீல் சங்கம் இணைந்து நடத்திய நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்கத் தலைவா் கே.கே.ராஜேந்திரன் தலைமை வகித்தாா். இன்னா்வீல் சங்கத் தலைவா் ஜி.அலமேலுமங்கை, முன்னாள் தலைவா் வி.முத்துசாமி, இன்னா்வீல் சங்கச் செயலா் உமா ரங்கராஜன், பொருளாளா் மஞ்சுளா கண்ணன், வி.பாபு உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். ரோட்டரி சங்கச் செயலா் பி.சிவக்குமாா் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வா் ச.நேரு (பொ) பங்கேற்றாா்.

குழந்தைகள் நலத் துறை பேராசிரியா் இரா.எழிலரசு, மகப்பேறு துறை பேராசிரியா் எஸ்வி.ஹேமலதா, உதவி நிலைய மருத்துவா் க.பொற்செல்வி உள்ளிட்டோா் தாய்ப்பால் கொடுப்பதின் அவசியம் குறித்தும், புட்டிப்பால் கொடுப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விளக்கினா்.

முன்னதாக மருத்துவம் பயிலும் மாணவா்களுக்கும், செவிலியா்களுக்கும் கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்றவா்களுக்கு ரோட்டரி சங்கத் தலைவா் பரிசுகளை வழங்கினாா்.

குழந்தைகள் நல மருத்துவா் ச.செந்தில்ராஜ் நன்றி கூறினாா்.

You may also like

© RajTamil Network – 2024