Sunday, September 22, 2024

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை தேவை – மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன்

by rajtamil
0 comment 23 views
A+A-
Reset

புதுடெல்லி,

டெல்லியில் பேட்டியளித்த மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியதாவது:-

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்த 200-க்கும் மேற்பட்டோர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 56 பேர் இறந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள். இந்த சம்பவத்தை நான் கண்டிக்கிறேன்.

விஷ சாராய விவகாரத்தில் தி.மு.க.விற்கு தொடர்பு உள்ளதால் முறையாக விசாரணை நடக்காது. எனவே, இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை தேவை. விஷ சாராயத்தால் 56 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதுகுறித்து காங்கிரஸ் ஒரு வார்த்தை கூட பேசாதது எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது. மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி இதுவரை கருத்து கூறாதது ஏன்?

தமிழகத்தில் எல்லா இடங்களிலும் டாஸ்மாக் கடைகள் இருந்தும் விஷ சாராய விற்பனை நடந்துள்ளது. அதை அருந்தி பலர் இறந்துள்ளனர். சட்டபூர்வமாக மதுபானம் விற்கப்படும் தமிழகத்தில் எப்படி விஷ சாராய மரணம் நேரிட்டது? விஷ சாராய விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் விவாதத்தை அரசு அனுமதிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

You may also like

© RajTamil Network – 2024