Saturday, September 21, 2024

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம்: “காவல்துறை மெத்தனமாக இருந்துள்ளது” – அமைச்சர் பரபரப்பு பேட்டி

by rajtamil
0 comment 24 views
A+A-
Reset

விஷச்சாராயம் அருந்தி 13 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, கலெக்டரை பணியிட மாற்றம் செய்தும், காவல்துறை கண்காணிப்பாளரை சஸ்பெண்ட் செய்தும் தமிழக அரசு உத்தரவிட்டது.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி அருகே உள்ள கருணாபுரம் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை நடைபெற்று வருவதாக தொிகிறது. இங்கு நடைபெறும் சாராய விற்பனை குறித்து அப்பகுதி மக்கள் அதிகாாிகளுக்கும் தகவல் தொிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் சாராயம் விற்பனை தொடா்ந்து நடைபெற்று வந்ததாக தொிகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு அப்பகுதியை சோ்ந்த சிலா், அப்பகுதியில் விற்பனை செய்யப்படும் சாராயத்தை அருந்தியதாக கூறப்படுகிறது. கள்ளச்சாராயம் குடித்த 6 பேருக்கு வாந்தி, மயக்கம், தலைவலி மற்றும் வயிற்று எரிச்சல் ஏற்பட்டதையடுத்து அவர்கள் அனைவரும் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

அதில் முதற்கட்டமாக கணேசன் மகன் பிரவீன்(29), தர்மன் மகன் சுரேஷ் (46), சேகர், ஜெகதீசன் ஆகிய 4 பேர் உயிரிழந்தனர். மேலும் கிராமத்தில் சாராயம் குடித்த 80-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு சாிந்து விழுந்தனா். இவா்களையும் அங்கிருந்தவா்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ்கள் மூலம் சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சூழலில் கள்ளக்குறிச்சியில், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. 70-க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதில் 9 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. கள்ளச்சாராயம் குடித்து 13 பேர் உயிரிழந்த விவகாரத்தில் அப்பகுதியைச் சேர்ந்த சாராய வியாபாரி கண்ணுக்குட்டி என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ளது.

விஷச்சாராயம் அருந்தி 13 பேர் உயிரிழந்ததை அடுத்து, கலெக்டரை பணியிட மாற்றம் செய்தும், காவல்துறை கண்காணிப்பாளரை சஸ்பெண்ட் செய்தும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் மற்றும் எ.வ.வேலு ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். சிகிச்சை விபரங்கள் குறித்து மருத்துவர்களிடம் அமைச்சர்கள் கேட்டறிந்தனர்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, "கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் மெத்தனால் கலந்த விஷச்சாராயம் அருந்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனை முதல்வர்களுடன் தொடர்புகொண்டு தொடர்ந்து பேசி வருகிறோம். கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் 9 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். சாராயத்தில் மெத்தனால் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மெத்தனாலை கொண்டு வந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் உள்ளவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மெத்தனமாக இருந்த காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விஷச்சாராயம் குடித்து உயிரிழந்த விவகாரத்தில் தவறு நடந்ததை நியாயப்படுத்த விரும்பவில்லை.

உடல்கள் விரைந்து உடற்கூறாய்வு செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும். சிகிச்சை அளிக்க போதிய மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும். விஷச்சாராயத்தை ஒழிக்க கடும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்" என்று அவர் கூறினார்.

You may also like

© RajTamil Network – 2024