கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம் – 7 போலீசார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

by rajtamil
0 comment 15 views
A+A-
Reset

தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் உட்பட 7 பேரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி கருணாபுரம், மாதவச்சேரி, சேஷசமுத்திரம் ஆகிய பகுதிகளில் கடந்த மாதம் 19-ந் தேதி விஷ சாராயம் குடித்து 229 பேர் பாதிக்கப்பட்டனர். இவர்கள் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூாி மருத்துவமனைக்கும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனா். இதில் சிகிச்சை பலனின்றி 6 பெண்கள் உள்பட 66 பேர் பரிதாபமாக உயிாிழந்தனா்.

161 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியிருந்த நிலையில் 2 பேர் மட்டும் புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தனா். இந்த நிலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கருணாபுரம் திருவரங்கம் நகரை சோ்ந்த கண்ணன் (வயது 72) என்பவர் நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி பாிதாபமாக உயிாிழந்தாா். இதன் மூலம் இச்சம்பவத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 67 ஆக உயா்ந்தது.

இந்நிலையில் கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தில் தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் சண்முகம் உள்பட 7 பேரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விஷ சாராயத்தை தடுக்க தவறியதற்காகவும், அலட்சியமாக செயல்பட்டதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024