Sunday, October 20, 2024

கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு: இதுவரை 8 பேர் கைது

by rajtamil
0 comment 13 views
A+A-
Reset

விஷ சாராய உயிரிழப்பு சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் விஷ சாராயம் குடித்ததில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 80-க்கும் அதிகமானோர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து சாராயம் விற்பனை செய்தது தொடர்பாக அதேபகுதியை சோ்ந்த கோவிந்தராஜ் என்கிற கண்ணுக்குட்டி, அவரது மனைவி விஜயா, கோவிந்தராஜ் சகோதரா் தாமோதரன் ஆகிய 3 பேரை கைது செய்த போலீசாா், அவா்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

அதில் அவா்கள் சேஷசமுத்திரம் கிராமத்தை சோ்ந்த சின்னதுரை (வயது 45) என்பவாிடம் இருந்து சாராயம் வாங்கி விற்பனை செய்தது தொியவந்தது. இதையடுத்து சின்னதுரையை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கடலூா் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

தொடா்ந்து இச்சம்பவத்தில் தொடா்புடைய சாகுல் ஹமீது என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் மதுக்கரை போன்ற பல்வேறு பகுதிகளில் உள்ள நிறுவனங்களில் இருந்து சட்டவிரோதமாக மெத்தனால் வாங்கி வந்து கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. மாதேஷ் என்பவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சங்கராபுரம் பகுதியை சேர்ந்த ஜோசப் ராஜா என்பவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கில் ரங்கநாதபுரம் பகுதியைச் சேர்ந்த சகுந்தலா என்பவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். இவர் சட்டவிரோதமாக சாராயத்தை சப்ளை செய்து வந்தது விசாரணையில் அம்பலமானது. இதுவரை இவ்வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

© RajTamil Network – 2024