Friday, September 20, 2024

கள்ளச்சாராய மரணம்: 57 ஆக உயர்வு

by rajtamil
0 comment 31 views
A+A-
Reset

கள்ளச்சாராய மரணம்: 57 ஆக உயர்வுகள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது.கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் உடல்களை ஒரே இடத்தில் தகனம் செய்தற்காக அடிக்கி வைக்கட்டுள்ள மரக் கட்டைகள்.கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் உடல்களை ஒரே இடத்தில் தகனம் செய்தற்காக அடிக்கி வைக்கட்டுள்ள மரக் கட்டைகள்.

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ள நிலையில் அதற்கு காரணமாக இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் இதுவரை 31 பேர் இறந்துள்ளனர் என மாவட்ட நிர்வாகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் கிராமத்தில், கள்ளச்சாராயம் குடித்து உடல்நிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளுக்கு உயர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்ட நிர்வாகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையின்படி, கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உடல்நிலை பாதிக்கப்பட்ட 216 பேர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளுக்கு உயர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுப்பிரமணி, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சாமுண்டி என்பவரும் ஞாயிற்றுக்கிழமை சிகிச்சை பலனின்றி இறந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது.

புதுச்சேரி ஜிப்மர் மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 17 பேர் நலமுடன் இருப்பதாகவும், மூன்று பேர் இறந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் நான்கு பேர் நலமுடனும், நான்கு பேர் இறந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் 31 பேர் இறந்துள்ளனர், 108 பேர் நலமுடன் உள்ளனர்.

சேலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 30 பேர் நலமுடனும், 18 பேர் இறந்துள்ளனர் என்று அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணத்துக்கு காரணமாக இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

You may also like

© RajTamil Network – 2024