Friday, September 20, 2024

கள்ளச் சாவுக்கு எதுக்கு நல்லச் சாவு? – நடிகர் பார்த்திபன் கண்டனம்

by rajtamil
0 comment 21 views
A+A-
Reset

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து பலியானவர்கள் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது.

சென்னை,

கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரத்தில் கடந்த 18-ம் தேதி சட்டவிரோதமாக விற்கப்பட்ட விஷ சாராயத்தை வாங்கி சிலர் குடித்துள்ளனர். இதில் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டு நேற்று முன் தினம் இரவு 11 மணியளவில் 17 பேர் வரையில் உயிரிழந்தனர். நள்ளிரவில் இறப்பின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து அதிகாலையில் உயிரிழப்பு 29-ஆக அதிகரித்தது.

அதைத் தொடர்ந்து மேலும் பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டு அடுத்தடுத்து மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். முற்பகலில் இறப்பின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து 36 என ஆனது. நேற்று மாலை நிலவரப்படி இறப்பு எண்ணிக்கை 40 ஆக உயர்ந்தது. இந்த நிலையில், விஷ சாராயம் குடித்து பலியானவர்கள் எண்ணிக்கை இன்று 52 ஆக உயர்ந்துள்ளது. விஷ சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண தொகை அரசு அறிவித்துள்ளது.

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொடூர சம்பவத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நடிகர் பார்த்திபன் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "கள்ளச் சா….வுக்கு எதுக்கு நல்லச் சாவு (10 லட்சம்)? என்று தெரிவித்துள்ளார்.

கள்ளச் சா…. வுக்கு எதுக்கு
நல்லச் சாவு (10 L) ?

— Radhakrishnan Parthiban (@rparthiepan) June 21, 2024

Original Article

You may also like

© RajTamil Network – 2024