Monday, September 23, 2024

காங்கிரஸின் மகிழ்ச்சியை புரிந்து கொள்ள முடியவில்லை: பிரதமர் மோடி

by rajtamil
0 comment 11 views
A+A-
Reset

காங்கிரஸின் மகிழ்ச்சியை புரிந்து கொள்ள முடியவில்லை: பிரதமர் மோடிகுடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்துக்கு மோடி பதிலுரை.காங்கிரஸின் மகிழ்ச்சியை புரிந்து கொள்ள முடியவில்லை: பிரதமர் மோடி

தேர்தலில் தோற்ற பிறகும் காங்கிரஸ் மகிழ்ச்சியாக இருப்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்று பிரதமர் மோடி புதன்கிழமை மாநிலங்களவையில் தெரிவித்தார்.

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பதிலளித்து பிரதமர் மோடி மாநிலங்களவையில் இன்று உரையாற்றினார்.

அப்போது, காங்கிரஸ் குறித்து பிரதமர் மோடி பேசியதாவது:

“இந்த தேர்தல் முடிவால் மூலதனச் சந்தையில் ஏற்றம் காணப்பட்டது மட்டுமின்றி, உலகம் முழுவதும் மகிழ்ச்சியான சூழல் நிலவுகிறது. இதற்கு மத்தியில் காங்கிரஸ் கட்சியினரும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த மகிழ்ச்சிக்கு காரணம் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இந்த மகிழ்ச்சி ஹாட்ரிக் தோல்விக்கா? 90 தொகுதிகளிலேயே வெற்றி பெற்றதற்கா? அவர்களின் மற்றொரு பிரசாரமும் தோல்வி அடைந்ததற்காகவா?

கார்கே முழு ஆற்றலுடன் இருப்பதைப் பார்த்தேன். அவர் தனது கட்சிக்கு நிறைய சேவை செய்தார். ஏனென்றால், யாரோ ஒருவர் மீது சுமத்தப்பட வேண்டிய தோல்வி பழியை அவர் காப்பாற்றினார். சுவர் போல் நின்று கொண்டுள்ளார். இதுபோன்ற சூழல்களையெல்லாம் தலித் அல்லது பிற்படுத்தப்பட்டோர் தாங்க வேண்டும், அந்த குடும்பம் மட்டும் பாதுகாப்பாக இருக்கும்.

மக்களவைத் தலைவர் விவகாரத்திலும் தோற்கடிக்கப்படுவார் என்று தெரிந்தும் ஒரு தலித்தை முன்னிறுத்தினர். குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசுத் தலைவர் தேர்தலின் போதும் சுஷில் குமார் ஷிண்டேவை நிறுத்தினார்கள்.

எஸ்சி, எஸ்டி, ஓபிசிக்கு எதிரான மனப்பான்மை காங்கிரஸுக்கு உண்டு. அதன் காரணமாகவே முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை அவமானப்படுத்தினார்கள். நாட்டின் முதல் பழங்குடி பெண் குடியரசுத் தலைவரையும் விட்டுவிடவில்லை, யாரும் பயன்படுத்த வார்த்தைகளை கூறினார்கள்.” எனத் தெரிவித்தார்.

You may also like

© RajTamil Network – 2024